News October 9, 2024
லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் கடைசி எச்சரிக்கை!

இஸ்ரேல் – ஈரான் போர் ஒருபுறம் தீவிரம் அடைந்து கொண்டிருக்க, மறுபுறம், லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசுகையில், “லெபனான் மக்களே, ஹிஸ்புல்லாவை அகற்றி போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள். இல்லையெனில், காசா பேரழிவு உங்களுக்கும் வரும். உங்கள் முடிவை நீங்களே தீர்மானியுங்கள்” எனக் கூறியுள்ளார்.
Similar News
News November 7, 2025
கவுரி கிஷனுக்கு ஆதரவாக நிற்கும் சந்தோஷ் நாராயணன்

நடிகை கவுரி கிஷனிடம் யூடியூபர் ஒருவர் உங்கள் எடை என்ன என கேட்டது பெரும் சர்ச்சையானது. யூடியூபருக்கு மேடையிலேயே கவுரி கிஷன் தக்க பதிலடி கொடுத்த நிலையில், அவரது தைரியத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாராட்டு தெரிவித்துள்ளார். தனது கருத்து சரி என்பது போல் பத்திரிகையாளர் தொடர்ந்து பேசியது, அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News November 7, 2025
நாளை சங்கடஹர சதுர்த்தி… நன்மைகள் என்னென்ன?

நாளை மதியம் 12.33 மணிக்கு சங்கடஹர சதுர்த்தி திதி தொடங்கி, மறுநாள் காலை 10.25 வரை இருக்கிறது. மாலை நேர வழிபாடு தான் சங்கடஹர சதுர்த்திக்கு உகந்தது என்பதால், நாளை மாலை விநாயகரை வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும். முக்கியமாக விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது சிறப்பானது. அருகம்புல் படைத்து வழிபட்டால் நோய்கள், கடன் தொல்லை உள்ளிட்ட பல பிரச்னைகள் நீங்கி விடும் என்பது நம்பிக்கை.
News November 7, 2025
செங்கோட்டையனுக்கு பின்னணியில் திமுக? நயினார்

செங்கோட்டையன் விவகாரத்தின் பின்னணியில் திமுக உள்ளதோ என்ற சந்தேகம் உள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் பாஜகவில் யாரை பார்த்தார் என்ன பேசினார் என்ற தெளிவான தகவல் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் <<18224796>>6 பேர் சென்றதாக செங்கோட்டையன் கூறும்<<>> நிலையில் அவர்கள் யார் எனவும் நயினார் கேள்வி எழுப்பியுள்ளார்.


