News November 17, 2024

பெண்களுக்கு GOOD NEWS

image

தமிழக அரசால் கிராமப்புற ஏழை விதவைகள், ஆதரவற்ற பெண்கள் மேம்பாட்டிற்காக நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் 40 கோழிக் குஞ்சுகள் வாங்க 50% மானியம் வழங்கப்படுகிறது. சென்னை தவிர அனைத்து மாவட்டங்களிலும் ஊராட்சிகளுக்கு தலா 100 பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். இதற்கு முதல்வர் முகாம், அரசு கால்நடை மருந்தகம், கால்நடை மருத்துவரிடம் விண்ணப்பிக்கலாம். SHARE IT

News November 17, 2024

27ஆம் தேதி முர்மு தமிழகம் வருகை

image

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, 4 நாள் அரசுமுறை பயணமாக வரும் 27ஆம் தமிழகம் வருகை தரவுள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நேரடியாக கோவை விமானப்படை தளம் வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் உதகைக்கு செல்லவுள்ளார். இதைத் தொடர்ந்து, நீலகிரி, திருச்சி, திருவாரூர் மாவட்டங்களில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

News November 17, 2024

திருமாவின் உள்ளத்தை அறிவேன்: ஸ்டாலின்

image

அருமைச் சகோதரர் திருமாவளவனின் உள்ளத்தை தான் அறிவேன் என CM ஸ்டாலின் கூறியுள்ளார். மூத்த சகோதரராக திருமாவளவன் உண்மையான பாசம் காட்டுவதாகவும், தன்னுடைய உறுதியான செயல்பாடுகளை அவரும் அறிவார் எனவும் CM தெரிவித்துள்ளார். மேலும், திராவிட மாடல் அரசிடம் அவர் வைத்த கோரிக்கை ஓராண்டுக்குள் நிறைவேறி, அரியலூரில் சிப்காட் அமைவதற்கு தன்னை சந்தித்து நன்றியை தெரிவித்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

News November 17, 2024

BREAKING: TNPSC முக்கிய அறிவிப்பு

image

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முக தேர்வு பதவிகள்) நாளை, நாளை மறுநாள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் TNPSC வெளியிட்ட அறிவிப்பில், தேர்வுக்கு காலை 8.30 மணிக்குள்ளும், மதியம் 1.30 மணிக்குள்ளும் வர வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளது. சலுகையாக கூடுதலாக அரை மணி நேரம் அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள TNPSC, காலையில் 9.30, மதியம் 2.30க்கு தேர்வுகள் தொடங்குமெனவும் கூறியுள்ளது. SHARE IT.

News November 17, 2024

நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பவர்களின் கவனத்திற்கு…

image

வேலையின் காரணமாக நீண்ட நேரம் அமர்ந்தே படியே இருப்பவர்களுக்கு உடலில் பல பிரச்னைகள் உண்டாகும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இது குறித்து 1,000 பேரிடம் அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதில், நீண்ட நேரம் அமர்ந்தே இருப்பவர்களுக்கு விரைவில் உடலில் முதுமை ஏற்பட்டு இதய நோய், மனநலப் பிரச்னைகள் ஏற்படலாம் என்கிறார்கள். வேலைக்குப் பிறகு தீவிர நடைப்பயிற்சி தேவை என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

News November 17, 2024

Breaking: உலக கேரம் சாம்பியன் ஆனார் தமிழக வீராங்கனை

image

அமெரிக்காவில் நடைபெற்ற உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை காசிமா, தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சென்னை புது வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்தவரான காசிமா, மகளிர் தனிநபர் பிரிவு உள்ளிட்ட 3 பிரிவுகளில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். அவரது தந்தை மெகபூப் பாஷா ஆட்டோ ஓட்டுநர் ஆவார். அமெரிக்காவில் இருந்து வரும் 21ஆம் தேதி காசிமா தாயகம் திரும்ப உள்ளார்.

News November 17, 2024

RAIN ALERT: இரவு 7 மணி வரை இங்கு மழை கொட்டப் போகுது

image

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதில், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, காரைக்காலில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. SHARE IT.

News November 17, 2024

மிடில் கிளாஸ்க்கு நல்ல காலம்? நிதியமைச்சர் ரிப்ளை

image

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால் ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில், மிடில் கிளாஸ் மக்களின் சுமையை குறைக்க, நிவாரணத் திட்டங்களை அறிவிக்குமாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு X-ல் பயனர் ஒருவர் கோரிக்கை விடுத்தார். அதற்கு மோடியின் அரசு மக்கள் குரலுக்கு செவி சாய்க்கும் எனவும், உங்களின் கோரிக்கை அங்கீகரிக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

News November 17, 2024

டிச.31க்குள் 9-12 வகுப்பு மாணவர்களுக்கு E-MAIL I.D.

image

9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிச.31க்குள் E-MAIL I.D. உருவாக்கித் தர அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதில், பொறியியல், பாலிடெக்னிக், தொழிற்கல்வி, கல்லூரிகளில் சேரவும், பாடத் திட்ட தகவல்கள், தேர்வுகள், விடுதிகள், சுற்றறிக்கை பெறவும் மாணவர்களுக்கு E-MAIL I.D. உருவாக்கித் தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. E-MAIL குறித்து பயிற்சி அளிக்கவும் கேட்டுள்ளது.

News November 17, 2024

சிறை வேண்டாம்.. கெஞ்சிய கஸ்தூரி

image

தெலுங்கு மொழி பேசுவோரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட கஸ்தூரியை 29ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது நடைபெற்ற விசாரணையின்பாேது, தனது மகளை கவனிக்க தாம் மட்டுமே இருப்பதாகக் கூறி ஜாமின் அளிக்க வேண்டுமென கஸ்தூரி கோரியதாகக் கூறப்படுகிறது. அதேபோல், சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டாம் என கெஞ்சியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!