News November 17, 2024
நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பவர்களின் கவனத்திற்கு…

வேலையின் காரணமாக நீண்ட நேரம் அமர்ந்தே படியே இருப்பவர்களுக்கு உடலில் பல பிரச்னைகள் உண்டாகும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இது குறித்து 1,000 பேரிடம் அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதில், நீண்ட நேரம் அமர்ந்தே இருப்பவர்களுக்கு விரைவில் உடலில் முதுமை ஏற்பட்டு இதய நோய், மனநலப் பிரச்னைகள் ஏற்படலாம் என்கிறார்கள். வேலைக்குப் பிறகு தீவிர நடைப்பயிற்சி தேவை என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News December 13, 2025
லோன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

RBI ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைத்ததை தொடர்ந்து, பல வங்கிகள் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளன. இதனால், வீடு, கார், தனிநபர் கடனுக்கான வட்டி வெகுவாக குறைந்துள்ளது. அதன்படி, எந்தெந்த வங்கிகள், எவ்வளவு குறைத்துள்ளன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News December 13, 2025
ஸ்டேடியம் சூறையாடல்.. AIFF விளக்கம்

<<18551245>>கொல்கத்தா <<>>சால்ட் லேக் ஸ்டேடியத்தில் நடந்த சூறையாடல் சம்பவம், கவலையளிப்பதாக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (AIFF) தெரிவித்துள்ளது. இது தனியாரால் நடத்தப்பட்ட நிகழ்வு என்றும், இதற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை எனவும் AIFF கூறியுள்ளது. நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தங்களிடம் எந்த ஒப்புதலும் பெறவில்லை எனவும் AIFF விளக்கமளித்துள்ளது. இதனிடையே நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை <<18553073>>கொல்கத்தா<<>> போலீஸ் கைது செய்துள்ளது.
News December 13, 2025
தொகுதி பட்டியலுடன் நட்டாவை சந்திக்கிறாரா நயினார்?

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் டெல்லி சென்றுள்ள நயினார் நாகேந்திரன், JP நட்டாவை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, 2026 தேர்தலில் தமிழகத்தில் பாஜக போட்டியிட விரும்பும் <<18554907>>தொகுதிகளின் பட்டியலை<<>> அவரிடம் வழங்கவுள்ளாராம். முன்னதாக, FM நிர்மலா சீதாராமனை நயினார் சந்தித்தார். தனது நடைபயணத்தில் மக்களிடம் பெற்ற மனுக்களை FM-யிடம் வழங்கியதாக அவர் கூறியுள்ளார்.


