News November 17, 2024

திருமாவின் உள்ளத்தை அறிவேன்: ஸ்டாலின்

image

அருமைச் சகோதரர் திருமாவளவனின் உள்ளத்தை தான் அறிவேன் என CM ஸ்டாலின் கூறியுள்ளார். மூத்த சகோதரராக திருமாவளவன் உண்மையான பாசம் காட்டுவதாகவும், தன்னுடைய உறுதியான செயல்பாடுகளை அவரும் அறிவார் எனவும் CM தெரிவித்துள்ளார். மேலும், திராவிட மாடல் அரசிடம் அவர் வைத்த கோரிக்கை ஓராண்டுக்குள் நிறைவேறி, அரியலூரில் சிப்காட் அமைவதற்கு தன்னை சந்தித்து நன்றியை தெரிவித்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News December 13, 2025

BREAKING: ஆலோசனைக் கூட்டத்தை ஒத்திவைத்தார் OPS

image

டிச.15-ல் நடைபெற இருந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக OPS அறிவித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து முடிவு செய்யவில்லை என்றால், டிச.15-ல் உரிமைப் மீட்பு குழுவை இயக்கமாக மாற்றுவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று அவரின் ஆதரவாளர்கள் கூறியிருந்தனர். இதற்கிடையில், கடந்த வாரம் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த நிலையில், கூட்டத்தை OPS ஒத்திவைத்துள்ளார்.

News December 13, 2025

கேன்சரை தடுக்கும் கொய்யா!

image

நமது ஊர்களில் எளிதாக கிடைப்பதால் கொய்யா பழத்தை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை எனக்கூறும் டாக்டர்கள், அது கேன்சரையே தடுப்பதாக தெரிவித்துள்ளனர். *ஆய்வுகளின் படி, கொய்யாவில் உள்ள லைகோபீன் என்ற கரோட்டினாய்டு, கேன்சர் செல்கள் உருவாவதையும், அவற்றின் வளர்ச்சியையும் தடுக்கிறது *இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது *நார்ச்சத்து வயிறு தொடர்பான பிரச்னைகளை சரி செய்கிறது.

News December 13, 2025

மேகதாட்டு அணைக்கு எதிராக SC-ஐ நாடுவோம்: துரைமுருகன்

image

மேகதாட்டு அணை தொடர்பாக TN அரசு சார்பில் SC-ல் மறுபரிசீலனை மனு தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். SC-ல் தெரிவிக்கப்பட்டுள்ள சில கருத்துக்கள் முரணாக உள்ளதாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், டெல்டா விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், கர்நாடகாவின் முயற்சியை திமுக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!