India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரபல பான் இந்தியா நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் சரோஜா சஞ்சீவ் (80) இன்று காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட அவர், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை மரணம் அடைந்தார். கன்னட நடிகரான கிச்சா சுதீப், நான் ஈ, பாகுபலி போன்ற திரைப்படங்கள் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ஆவார். பல பேட்டிகளில் தனது தாயின் பெருமைகளை அவர் பேசியுள்ளார்.
தவெக மாநாட்டை முன்னிட்டு தனது தொண்டர்களுக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார். அதில், “நமது முதல் அரசியல் மாநாட்டில் உங்கள் முகங்களை பார்ப்பதற்காக என் மனம் தவம் கிடக்கிறது. வாய் மொழியில் வித்தை காட்டுவது நம் அரசியல் அல்ல. செயல்மொழியே நம் அரசியலின் தாய்மொழி. மாநாட்டிற்கு கர்ப்பிணிகள், முதியவர்கள், சிறார்கள் வர வேண்டாம். பயண வழிகளில் கட்சியினர் ஒழுங்கை கடைபிடிக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, வெங்காயம், தக்காளி போட்டு தாளித்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும். தனியே வேக வைத்த கோழிக்கறித் துண்டுகள், மஞ்சள், உப்பு, பூண்டு, இஞ்சி, கரம் மசாலா போடவும். அதில் தேங்காய், சீரகம், ப.மிளகாய் ஆகியவற்றை மிக்சியில் மைய அரைத்து ஊற்றவும். இந்த கலவையை நன்கு கொதிக்க வைத்து, மல்லித்தழைகளை தூவி இறக்கினால் சுவையான மலபார் சிக்கன் குருமா ரெடி.
வடகிழக்கு பருவமழை, மேலடுக்கு சுழற்சி உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையில் அதிகாலை முதலே விட்டு விட்டு மழை பெய்கிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை – திருச்சி நெடுஞ்சாலையை அதிவேக 8 வழிச்சாலையாக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது. வாகன பெருக்கம், நெரிசல், சாலை விபத்துகள், பயண நேரம் குறைப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 310 கி.மீ. தொலைவை 6 மணி நேரத்திற்கு பதிலாக 4 மணி நேரத்திலேயே கடக்க முடியும் எனக் கூறப்படுகிறது. இதற்கான பணிகள் 2025 மத்தியில் தொடங்குகிறதாம்.
➤நெய்யில் சிறு கட்டி வெல்லத்தை போட்டு வைத்தால் எத்தனை நாட்கள் ஆனாலும் கெடாது. ➤தாளிக்கும் போது மிளகாய் வற்றல் கருகாமல் இருக்க தண்ணீரில் கழுவிய பின் பயன்படுத்தலாம். ➤வெண்டைக்காய் பொரியலில் வறுத்த வேர்க்கடலையை பொடித்துப்போட்டு கலந்தால் சுவை கூடும். ➤பூண்டுடன் உருளைக்கிழங்கை வைத்தால், சீக்கிரம் முளைத்து வராமல் இருக்கும். ➤தக்காளி சீக்கிரமாக வதங்க, சர்க்கரை ஒரு டீஸ்பூன் சேர்த்தால் போதும்.
மாநகர பஸ்களில் 50% கட்டண சலுகையுடன் மாணவர்கள் பயணிக்க அளிக்கப்படும் மாதாந்திர டிக்கெட் விற்பனைக்கான அவகாசம், வரும் 24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாநகர பேருந்தில் செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் நலன்கருதி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதில் 50% கட்டண சலுகை SCT, MST அட்டை மற்றும் ரூ.1,000 TAYPT அட்டை பயண அட்டைகளை, வரும் 24-ஆம் தேதி வரை வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கான முதற்கட்ட பணிகள் 18 மாதங்களில் முடியும் என மதுரை எய்ம்ஸ் செயல் இயக்குநர் ஹனுமந்தராவ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், முதற்கட்டமாக விடுதி மற்றும் வகுப்பறை கட்டுமான பணிகள் 2025 டிசம்பருக்குள் முடியும் என்றார். அதன்பிறகு எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான மாணவர்கள் சேர்க்கை நேரடியாக இங்கு நடைபெறும் எனக் கூறினார்.
திமுக கூட்டணியில் இருந்து கொண்டே உதயநிதியை விமர்சித்துள்ளார் வேல்முருகன். தொலைக்காட்சி பேட்டியில் பேசிய அவர், “சமீபத்தில் தமிழக துணை முதல்வராக உதயநிதி பொறுப்பேற்றார். அவருக்கு நியமிக்கப்பட்ட செயலாளர் பிரதீப் யாதவ் யார்? அவர் ஒரு வடநாட்டு ஐஏஎஸ் அதிகாரி. ஏன் இங்க தமிழ் அதிகாரிகளே இல்லையா? உங்களுக்கு செயலாளராக இருக்கும் திறமை தமிழர்களுக்கு இல்லையா.. இதை மக்கள் சிந்திக்க வேண்டும்” எனக் கூறினார்.
நவீன கால போர்களுக்கு தயாராக இருக்க வேண்டுமென பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், பாரம்பரிய போர் முறைகளுக்குப் பதிலாக, சைபர், விண்வெளி, பொருளாதாரம் மற்றும் தகவல்கள் வாயிலாக தற்போது நடப்பதாகக் கூறினார். மேலும், புதிய களத்தில் நடக்கும் போர் பாரம்பரிய போர் முறைகளை விஞ்சிவிட்டது என்றார்.
Sorry, no posts matched your criteria.