News November 19, 2024

ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய அணி அறிவிப்பு

image

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அமீர் அலி கேப்டனாகவும், ரோகித் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓமன் தலைநகர் மஸ்கட்டில் வரும் 26ஆம் தேதி தொடங்கி நவம்பர் 4ஆம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்திய அணியில், பிரின்ஸ்தீப் சிங், பிக்ரம்ஜித் சிங், தலேம் பிரியோபர்தா, ஷர்தானந்த் திவாரி, யோகம்பர் ராவத் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

News November 19, 2024

விரைவில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல்

image

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், அதுவே இந்தியாவின் எதிர்காலத்திற்கு சரியாக இருக்கும் என்றார். வரும் 25ஆம் தேதி குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது.

News November 19, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶நவம்பர் – 19 ▶கார்த்திகை – 04
▶கிழமை: செவ்வாய்
▶நல்ல நேரம்: 07:45 AM – 08:45 AM & 04:45 PM – 05:45 PM
▶கெளரி நேரம்: 10:45 AM – 11:45 AM & 07:30 PM – 08:30 PM
▶ராகு காலம்: 03:00 PM – 04:30 PM
▶எமகண்டம்: 09:00 AM – 10:30 AM
▶குளிகை: 12:00 AM – 01:30 AM
▶திதி: சதுர்த்தி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்
▶சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்

News November 19, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (நவ.19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

OTTயில் வெளியாகிறது பிளடி பெக்கர்

image

இயக்குநர் நெல்சன் திலீப் குமார் தயாரிப்பில் கவின், ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் ‘பிளடி பெக்கர்’. கவின் ‘பிச்சைக்காரன்’ கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படம் வெளியாகி 2 வாரங்களை கடந்த நிலையில், வரும் 29ஆம் தேதி அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை OTTயில் பார்க்க யாரெல்லாம் வெயிட்டிங்?

News November 19, 2024

22 பேர் கொண்ட இலங்கையின் புதிய அமைச்சரவை!

image

இலங்கையின் புதிய அமைச்சரவை இன்று பொறுப்பேற்றுக்கொண்டது. அதிபர் அநுர குமார திசநாயக தலைமையிலான அமைச்சரவையில் அவர் உட்பட 22 பேர் இடம்பெற்றுள்ளனர். நிதி, பாதுகாப்பு, திட்டம் மற்றும் டிஜிட்டல் ஆகிய துறைகள் அதிபர் வசம் உள்ளன. பிரதமர் ஹரிணி அமரசூர்யாவுக்கு கல்வித்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. கடல்தொழில் நீரியல் வழங்கல் துறை அமைச்சராக தமிழரான ராமலிங்கம் சந்திரசேகரன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

News November 19, 2024

ராசி பலன்கள் (19-11-2024)

image

➤மேஷம் – சுகம்
➤ரிஷபம் – ஆதாயம்
➤மிதுனம் – நன்மை
➤கடகம் – செலவு
➤சிம்மம் – தடங்கல்
➤கன்னி – வெற்றி
➤துலாம் – ஆதாயம்
➤விருச்சிகம் – புகழ்
➤தனுசு – தோல்வி ➤மகரம்- அமைதி
➤கும்பம் – நலம் ➤மீனம் – உற்சாகம்

News November 19, 2024

ஹாஸ்பிடல்களில் தீத்தடுப்பு.. மாநில அரசுகளுக்கு உத்தரவு

image

ஹாஸ்பிடல்களில் தீத்தடுப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யும்படி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அதில், மின்கசிவு உள்ளிட்டவற்றால் தீவிபத்து அடிக்கடி நேரிடுவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதை ஆய்வு செய்ய, நடவடிக்கை எடுக்க கலெக்டர் தலைமையில் குழு அமைக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!