India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மழைக்காலத்தில் நோய் பரவல் அதிகமாக இருக்கும். எனவே நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்கள் மீது அதிக கவனம் தேவை. குறிப்பாக மழைக்காலத்தில் நாம் அதிக தண்ணீர் குடிப்பதில்லை. தாகம் ஏற்படவில்லை என்பதால் உடலுக்கு தண்ணீர் தேவையில்லை என்று அர்த்தமில்லை அதிக தண்ணீர் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் சுறுசுறுப்பாக செயல்படவும் உதவுகிறது. இதை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
IPL வரலாற்றில் யாராலும் முடியாத சாதனையை இந்திய வீரர் ஜிதேஷ் சர்மா பெற்றுள்ளார். கடந்த முறை IPL ஏலத்தில் பஞ்சாப் அணி அவரை ₹20 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கியது. ஆனால், இந்த முறை பழைய தொகையுடன் ஒப்பிடும்போது 5,400% அதிகமாக, அதாவது ₹11 கோடிக்கு RCB அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இதுவரை எந்த வீரருக்கும் இந்த அளவு ஊதிய வித்தியாசம் இருந்ததில்லை. இது அவரது திறமைக்கு கிடைத்த பரிசாக பார்க்கப்படுகிறது
இனி (90 நாட்களுக்குப் பின்) கூகுள் மேப்ஸில் உள்ள Location History தானாக அழிந்துவிடுமென, கூகுள் தனது பயனர்களுக்கு மின்னஞ்சல் வழியே தகவல் தெரிவித்துள்ளது. எனவே, Google Maps சேமித்து வைத்திருக்கும் பயண விவரங்களை ப்ரைவசிக்காக சேர்த்து வைக்க விரும்புவோர், தங்கள் சாதனங்களில் அதன் பிரதியை சேமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கு, Location Services சென்று Export Your Location-ஐ தேர்ந்தெடுத்தால் போதும்.
அதிமுகவை ராணுவ கட்டுப்பாட்டுடன் EPS வழி நடத்துவதாக R.B.உதயகுமார் தெரிவித்துள்ளார். ADMK கள ஆய்வுக் கூட்டத்தை கலவர ஆய்வுக் கூட்டம் என உதயநிதி விமர்சித்ததை குறிப்பிட்டு பதிலளித்த அவர், தங்களுக்கு உள்ள செல்வாக்கை பார்த்து பயந்துபோய் உளறுகிறார் என்றார். மேலும், அதிமுகவை கட்டுக்கோப்பாக EPS வழி நடத்துவதை பார்த்து பொறாமைப்படுவதால் தான் இவ்வாறு அவர் பேசிவருவதாகவும் கடுமையாக சாடினார்.
சம்பளதாரர்களுக்கான நலன்களுக்காக தனது அரசு செயல்படும் என கூறிய டிரம்பின் நிர்வாகத்தில்தான், பெரும் கோடீஸ்வரர்கள் உள்ளனர். டிரம்ப் அரசின் முக்கிய நிர்வாகிகளான எலான் மஸ்க், ஸ்காட் பெசன்ட், விவேக் ராமசாமி, லின்டா மெக்மஹோன், ஹோவார்ட் லட்னிக், ஸ்டீவ் விட்காஃப் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு $340 பில்லியன் (சுமார் ₹ 28 லட்சம் கோடி). இது, 169-க்கும் மேற்பட்ட நாடுகளின் மொத்த ஜிடிபியை விட அதிகம்.
வலுவான புயல் உருவாக வாய்ப்பில்லை என IMD தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் போது 50 -60 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரித்துள்ள வானிலை மையம், டெல்டா மாவட்டங்கள், கடலூரில் நாளையும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் நாளை மறுநாளும் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. தற்போது வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.
அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் அக்கட்சி நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதலை திமுக நிர்வாகிகள் விமர்சித்து வருகின்றனர். இதற்கு அதிமுக EX நிதியமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். திமுக கூட்டத்திலும் இதேபோல் பலமுறை அடிதடி நடந்துள்ளதாக சாடிய அவர், அழகிரிக்கு பயந்து மதுரை பக்கமே ஸ்டாலின் செல்லாமல் இருந்ததாகவும் விமர்சித்துள்ளார்.
உலக தங்க மதிப்பீடு கவுன்சில் அறிக்கையில், இந்தியர்கள் வீட்டில் 23,537 டன் தங்க நகைகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் 854 டன் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது, மத்திய அரசிடம் இருப்பதை விட மக்களிடம் 3 மடங்குக்கும் மேல் தங்கம் அதிகம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ₹193 லட்சம் கோடி. இது 2024 இறுதியில் ₹200 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராம் சரண், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ‘லைரானா’ பாடல் மாலை 6.03 மணிக்கு வெளியாகிறது. ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜன.10ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஏற்கனவே வெளியான இப்படத்தின் ‘ஜரகண்டி’, ‘ரா மச்சா மச்சா’ பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெக மாநாட்டில் கலந்துகொள்ள, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கானோர் வந்தனர். அப்போது நிகழ்ந்த சாலை விபத்துகளில் சீனிவாசன், விஜய், கலை, வசந்தகுமார் உட்பட 6 பேர் பலியாகினர். இந்நிலையில், அவர்களின் குடும்பத்தினரை விஜய் இன்று நேரில் அழைத்து தலா ₹ 2 லட்சம் நிதியுதவி வழங்கினார். மேலும், இறந்தவர்களின் குழந்தைகளின் கல்வி செலவையும் விஜய் ஏற்றுள்ளார்.
Sorry, no posts matched your criteria.