News November 28, 2024
கூகுள் மேப்ஸ் தொடர்பாக கூகுள் தந்த அப்டேட்

இனி (90 நாட்களுக்குப் பின்) கூகுள் மேப்ஸில் உள்ள Location History தானாக அழிந்துவிடுமென, கூகுள் தனது பயனர்களுக்கு மின்னஞ்சல் வழியே தகவல் தெரிவித்துள்ளது. எனவே, Google Maps சேமித்து வைத்திருக்கும் பயண விவரங்களை ப்ரைவசிக்காக சேர்த்து வைக்க விரும்புவோர், தங்கள் சாதனங்களில் அதன் பிரதியை சேமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கு, Location Services சென்று Export Your Location-ஐ தேர்ந்தெடுத்தால் போதும்.
Similar News
News November 8, 2025
இன்று மாலை 6 மணிக்கு ரெடியா இருங்க!

அரசியல் வருகையால் விஜய்க்கு இந்தாண்டு எந்த படமும் ரிலீசாகவில்லை. ‘ஜனநாயகன்’, அவரது கடைசி படம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘தளபதி கச்சேரி’ இன்று மாலை 6.03-க்கு வெளியாக உள்ளது. விஜய்யின் துள்ளலான டான்ஸை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மேலும், அரசியல் சார்ந்த வரிகள் பாடலில் இடம்பெறுமா என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. யாரெல்லாம் பாடலுக்கு வெயிட்டிங்?
News November 8, 2025
ஜோடியாக சுற்ற சூப்பரான 8 குளிர் மலைகள்

ஜோடியாக சுற்றிப்பார்க்க இந்தியாவில் எண்ணற்ற இடங்கள் உள்ளன. அவற்றில் இதமான காலநிலையும் இயற்கை அழகும் நிரம்பிய சிறந்த 8 ஹில் ஸ்டேஷன்களை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். அவற்றை ஸ்வைப் செய்து பாருங்க. உங்க பேவரைட் சுற்றுலா ஸ்பாட் எது? நீங்கள் உங்க ஜோடியுடன் செல்ல விரும்பும் ஊர் எது? கமெண்ட்ல சொல்லுங்க. உங்கள் ஜோடிக்கும் இதை share செய்து, எந்த ஊருக்கு போலாம்னு கேளுங்க.
News November 8, 2025
திமுக தோற்றால் மா.செ. பதவி காலி: மு.க.ஸ்டாலின்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 3 தொகுதிகளில் திமுக வெல்லவில்லை என்றால் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். ஓசூர், தளி, வேப்பனஹள்ளி தொகுதிகளில் திமுக கட்டாயம் வெற்றிபெற வேண்டும். குறிப்பாக, அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி MLA-வாக உள்ள வேப்பனஹள்ளியில் இந்த முறை திமுக தோற்கக்கூடாது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.


