News January 11, 2025

ரஷ்மிகா மந்தனாவுக்கு கால் உடைந்தது..!

image

ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் ஃபோட்டோ பலரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. ஜிம்மில் சென்று ஒர்க்அவுட் செய்த போது, அவரது காலில் பலமான அடிபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தனது காலில் அடிபட்டு கட்டுப்போடப்பட்ட ஃபோட்டோவை ரஷ்மிகா பகிர்ந்துள்ளார். மேலும், விரைவில் சிகாந்தர் மற்றும் குபேரா செட்டுக்குள் நுழைவேன். தாமதத்திற்காக எனது இயக்குநர்களிடம் மன்னிப்பு கோருகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

News January 11, 2025

போலீஸ் ஸ்டேஷனுக்கே இந்த நிலைமையா..?

image

வீடு – வங்கிகளில் கொள்ளையடித்த நிலைமை மாறி, தற்போது போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளேயே புகுந்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். தேனியில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு காவல் நிலையத்தின் பூட்டை உடைத்து நுழைந்த மர்மநபர்கள், அங்கிருந்த கஞ்சா பொட்டலங்கள், துப்பாக்கியை திருடிச் சென்றுள்ளனர். இதை தடுக்க முயன்ற காவலரின் மண்டையும் உடைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

News January 11, 2025

‘பௌர்ணமி அன்று கர்ப்பம் ஆகாதீர்கள்’ video

image

அறிவான குழந்தைகளை பெறுவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என ம.பி.யில் பள்ளி மாணவிகளிடம் பெண் டிஜிபி பேசிய <>வீடியோ <<>>தான் இன்றைய ஹாட் டாபிக். நான் சொல்வதை குறித்துவைத்து கொள்ளுங்கள். பௌர்ணமி நாளில் கருத்தரிக்க கூடாது. அதிகாலை வேளையில் சூரிய உதயத்துக்கு முன்பு எழுந்து, தண்ணீரை அருந்தி நமஸ்காரம் செய்தால் அறிவான குழந்தைகள் பிறக்கும் என கூறியுள்ளார். இதற்கு பலதரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது.

News January 11, 2025

ரயில்வே திட்டம் வேண்டாம் என தமிழக அரசு சொல்லவில்லை

image

மதுரை – தூத்துக்குடி புதிய ரயில்பாதை திட்டத்தை கைவிடுமாறு தமிழக அரசு கூறவில்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். இந்த திட்டத்தை கைவிட மாநில அரசு கோரியதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் கூறியதில் உண்மையில்லை என்றும், இத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மாநில அரசு கேட்டுக் கொண்டதால் திட்டம் கைவிடப்பட்டதாக, இன்று ரயில்வே அமைச்சர் கூறியிருந்தார்.

News January 11, 2025

மரணத்திற்கு பிறகும் வாழ்க்கை இருக்கிறதா?

image

மரணத்திற்கு பிறகும் வாழ்க்கை உள்ளதாக எல்லா மதங்களுமே கூறுகின்றன. ஆனால், பகுத்தறிவாளர்கள் இதை மறுக்கின்றனர். இந்நிலையில், இந்த விஷயத்தை நம்பும் மக்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளன. இதில் முதலிடத்தில் வங்கதேசம் உள்ளது. அங்கு 98.8% பேர் இதனை நம்புகிறார்கள். அதற்கு அடுத்தடுத்த இடங்களில் மொராக்கோ (96.2%), லிபியா (95.2%), துருக்கி (91.8%), ஈரான் (91.3%), பாக்., (89.3%) நாடுகள் உள்ளன.

News January 11, 2025

இந்தியா VS இங்கிலாந்து T20I சீரிஸ்

image

IND VS ENG இடையேயான 5 போட்டிகள் கொண்ட T20I தொடர் ஜன.22 முதல் தொடங்குகிறது. அதன் கால அட்டவணை (தேதி – நடைபெறும் இடம்) பின்வருமாறு: *1st T20I ஜன.22 கொல்கத்தா *2nd T20I ஜன.25 சென்னை, *3rd T20I ஜன.28 ராஜ்கோட், *4th T20I ஜன.31 புனே *5th T20I பிப்.2 மும்பை. சென்னையில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் முன்பதிவு நாளை (ஜன.12) தொடங்குகிறது.

News January 11, 2025

நவபஞ்சம ராஜயோகம்: துள்ளி குதிக்க போகும் 4 ராசிகள் ❤️

image

குருவுக்கு 9ஆம் வீட்டில் சூரிய பகவானும், சூரியனுக்கு 5ஆம் வீட்டில் குரு பகவானும் சஞ்சரிக்க போவதால் 4 ராசிகளுக்கு நவபஞ்சம ராஜயோகம் அடிக்கவுள்ளதாக ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அதன்படி, விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு வருமானம் பல மடங்கு உயரப் போகிறது. திறமையை வெளிப்படுத்தி முன்னேறும் காலம் இது. தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டு. மன உறுதியும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

News January 11, 2025

PM மோடிக்கு youtube-ல் எவ்வளவு வருமானம் வருது தெரியுமா?

image

PM மோடிக்கு அதிகாரப்பூர்வ YouTube சேனல், அவரது பெயரிலேயே உள்ளது. அவர் தொடங்கி வைக்கும் நிகழ்வுகள், அரசு நிகழ்ச்சிகள், நேர்காணல்கள் அதில் ஒளிபரப்பாகின்றன. சேனலுக்கு 2.6 கோடி சப்ஸ்கிரைபர்ஸ் உள்ள நிலையில், இதுவரை 29,272 வீடியோக்கள் பதிவிடப்பட்டுள்ளன. அவை 636 கோடிக்கும் அதிகமான Views பெற்றுள்ளன. மாதம் ரூ.1.62 கோடி முதல் ரூ.4.88 கோடி வரை சேனலில் இருந்து வருவாய் கிடைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News January 11, 2025

6 மணி நேர Spacewalk; சுனிதாவுக்கு புது Assignment!

image

விண்வெளியில் உலாவுவதை Spacewalk என்பார்கள். ஸ்பேஸ்ஷிப் உடன் பொருத்தப்பட்ட கருவிகளின் நிலையை சோதிக்கவும் பாதுகாப்பை உறுதிபடுத்தவும் ஆய்வுக்காகவும் விண்வெளி வீரர்கள் Spacewalk செல்வர். அப்படி சுனிதா வில்லியம்ஸ், அவரது சக விண்வெளி வீரர் நிக் ஹேக் உடன் ஜன.16 அன்று 6 மணி நேரம் Spacewalk செல்லவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. அதெல்லாம் சரி, சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு எப்போது திரும்பி வருவாங்க?

News January 11, 2025

JUSTIN: இந்திய T20 அணி அறிவிப்பு

image

இங்கி.,க்கு எதிரான T20 தொடருக்கான இந்திய அணியை BCCI அறிவித்துள்ளது. சூர்யகுமார் (C), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக், ரின்கு சிங், நிதிஷ் குமார், அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், ஷமி, வருண் சக்ரவர்த்தி, பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரல் இடம்பிடித்துள்ளனர். காயத்தால் அவதியடைந்து வந்த ஷமி மீண்டும் அணிக்கு திரும்பியது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்.

error: Content is protected !!