News January 11, 2025
இந்தியா VS இங்கிலாந்து T20I சீரிஸ்

IND VS ENG இடையேயான 5 போட்டிகள் கொண்ட T20I தொடர் ஜன.22 முதல் தொடங்குகிறது. அதன் கால அட்டவணை (தேதி – நடைபெறும் இடம்) பின்வருமாறு: *1st T20I ஜன.22 கொல்கத்தா *2nd T20I ஜன.25 சென்னை, *3rd T20I ஜன.28 ராஜ்கோட், *4th T20I ஜன.31 புனே *5th T20I பிப்.2 மும்பை. சென்னையில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் முன்பதிவு நாளை (ஜன.12) தொடங்குகிறது.
Similar News
News November 13, 2025
திருமணத்திற்கு Expiry Date வேண்டும்: கஜோல்

திருமணத்திற்கு Expiry Date மற்றும் Renewal ஆப்ஷன்கள் இருக்க வேண்டும் என நடிகை கஜோல் தெரிவித்துள்ளார். நீங்கள் சரியான நபரை தான் கரம் பிடித்திருக்கிறீர்களா என்பது தெரியாத போது, Renewal ஆப்ஷன் பயன்படும். சண்டைகள், முரண்கள் நிறைந்த மண வாழ்க்கையில் நீங்கள் நீண்ட நாள்கள் கஷ்டப்படக் கூடாது என்பதாக Expiry Date ஆப்ஷன் பயன்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அவரது கருத்தை நீங்க எப்படி பார்க்கிறீங்க?
News November 13, 2025
டெல்லி சம்பவம்: 300 கிலோ வெடிபொருள்கள் எங்கே?

டெல்லி குண்டு வெடிப்பை தொடர்ந்து, வங்கதேசம் & நேபாள் வழியாக இந்தியாவிற்கு வெடிபொருள்கள் கொண்டுவரப்பட்டதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மொத்தம் 3,200 கிலோ அம்மோனியம் நைட்ரேட் கொண்டுவரப்பட்டது. அதில் 2,900 கிலோ கைப்பற்றிய நிலையில், மீதமுள்ள 300 கிலோவை போலீசார் தேடி வருகின்றனர். பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளன்று (டிச.6) இந்தியா முழுவதும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
News November 13, 2025
500 இடங்களில் போலீஸ் ரெய்டு

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, ஜம்மு & காஷ்மீரில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜமாத் – இ- இஸ்லாமி (JeI) உள்ளிட்ட இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு தொடர்பான இடங்கள் உள்பட 500 இடங்களில் போலீசாரும், ராணுவமும் சோதனை நடத்தி வருகின்றனர். JeI அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீண்டும் ஆக்டிவ்வாக செயல்பட தொடங்கியதாக கிடைத்த உளவு தகவலைத் தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.


