India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சீமானை கைது செய்வது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் போலீசார் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக, மாநிலம் முழுவதும் அவர் மீது 60க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. சீமானின் பேச்சு சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாகவும், அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வரும் 20ஆம் தேதி அறிக்கை சமர்பிக்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
போகியையொட்டி இன்றும், நாளையும் (ஜன.,13, 14) விமானங்களின் வருகை, புறப்பாடு நேரங்களில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளார். கோலாலம்பூர் (ஏர் ஏசியா), துபாயிலிருந்து (எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்) வரும் விமானங்கள் தாமதமாக வந்துவிட்டு, இங்கிருந்து தாமதமாகவே புறப்படும். இது குறித்து பயணியருக்கு எஸ்.ஓ.பி., முறைப்படி உரிய தகவல் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் BJP Ex MLA ஹர்வன்ஷ் சிங் வீட்டில் IT அதிகாரிகள் நடத்திய சோதனையில் 4 முதலைகள் உள்ளிட்ட ஊர்வனவற்றை வளர்ப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். கடந்த 10ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ₹200 கோடிக்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது. இப்போது முதலை விவகாரத்தை வனத்துறையினர் கையில் எடுத்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாம். கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதை இது தானோ?
தினமும் சிறிது நேரம் வெறுங்காலில் நடப்பதால் கால்கள் வலுப்பெறும். இரத்த ஓட்டம் மேம்படும். சமதளமற்ற பரப்புகளில் நடக்கும்போது கால்களில் ஏற்படும் அழுத்தம் உடலின் செயல்பாட்டை மேம்படுத்தும். தொடை தசைகள் இறுகும். முழங்கால்கள், இடுப்பு, உடலின் மையப்பகுதியில் நல்ல இயக்கம் இருக்கும். நடக்கும் வேகம் அதிகரிக்கும். புல், மணல் அல்லது மண் போன்ற இயற்கை பரப்புகளுடன் ஏற்படும் இணைப்பு மன அழுத்தத்தை குறைக்கும்.
543 மக்களவைத் தொகுதிகளிலும் பாஸ்போர்ட் சேவை மையம் திறக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். இதனை நடைமுறைப்படுத்த வெளியுறவு அமைச்சகம், தபால் துறை இணைந்து திட்டம் வகுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எளிமையாக்கப்பட்டுள்ளது. ஆனால் மண்டல அளவிலேயே ஆவண சரிபார்ப்பு மையம் இருப்பதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இங்கி. டி20 தொடரில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் டி20ல் அசுரத்தனமான ஃபார்மில் இருக்கிறார். அடுத்து நடைபெறும் ஒருநாள் தொடரிலும் கே.எல்.ராகுலை கீப்பராக கொண்டுவரலாமா? என BCCI யோசனையில் உள்ளதாக தகவல் வெளிவருகிறது. காரணம், சாம்பியன்ஸ் ட்ராபி. அதிலும் பண்ட் வெளியேற்றப்படுகிறாரா என்ற கேள்வி எழாமல் இல்லை. பண்ட்டிடம் என்ன பிரச்னை உள்ளது. சாம்பியன்ஸ் ட்ராபி அணியில் மூவரில் யார் முக்கியம்?
தினசரி 5 நிமிடங்கள் ஒதுக்கி இப்பழக்கங்களை கடைப்பிடியுங்கள்: *1 நிமிடம் நிதானமாக சுவாசியுங்கள். அமைதி ஆற்றலை உள்ளிழுத்து, அன்பை வெளியிடுங்கள் *கிடைத்துள்ள ஆசிர்வாதங்களுக்காக நன்றி கூறுங்கள் *நாளை நன்றாகவே இருக்கும் என்று `ஆல் இஸ் வெல்’ சொல்லுங்கள் *கடந்தகால கசப்புகளை போக விடுங்கள், நாளை நமதே *நீங்கள் காணும் ஒவ்வொருவரிடமும் அன்பை வெளிப்படுத்துங்கள்.
IND vs IRE மகளிர் அணிகள் மோதும் 2ஆவது ODI போட்டி இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. கடந்த 10ஆம் தேதி நடந்த முதல் போட்டியில், IND அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 போட்டிகளை கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் IND முன்னிலை வகிக்கிறது. அதனால், தொடரை கைப்பற்றும் முனைப்பில் இன்று களமிறங்க உள்ளது. அதேபோல் தொடரை இழக்காமல் இருக்க அயர்லாந்து அணி கடுமையாக போராடும்.
ஆருத்ரா என்பது மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தைக் குறிக்கும். உலக இயக்கத்துக்குக் காரணமான நடராஜப் பெருமானின் உன்னத நடனத் திருக்கோலத்தை பதஞ்சலி & வியாக்ர பாதர் கண்டதை ஆருத்ரா தரிசனம் என்கிறார்கள். இந்த நாளில் (ஜன.,12) விரதமிருந்து, மாலையில் சிதம்பரம் சென்று நடராஜரைத் தரிசித்து, மகா அபிஷேகம், ஆராதனைகளில் பங்கேற்று, களி படைத்து வழிபட்டால் இன்னல்கள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம்.
தமிழ் தேசியத்தை இனவாதமாக மாற்ற சீமான் முயற்சிப்பதாக திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார். பிரபாகரன் எப்போதும் பிற மொழி, இன வெறுப்பில் ஈடுபட்டதில்லை எனவும், அவரது பெயரை சீமான் தனது நிலைப்பாட்டுக்கு பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் திருமா தெரிவித்துள்ளார். மேலும், திராவிட எதிர்ப்பு தான் தமிழ் தேசியம் என முடிவு செய்ததுடன், அவ்வாறு இருப்பவர்களுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் சாடியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.