News November 18, 2024
ரூ.1082,00,00,000 பறிமுதல்: EC
சட்டப்பேரவைத் தேர்தல், இடைத் தேர்தல் தொகுதிகளில் ரொக்கப் பணம், மதுபானம் உள்பட ரூ.1,082 கோடி மதிப்புடைய பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக EC தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.660 கோடி, ஜார்க்கண்டில் ரூ.198 கோடி, இடைத்தேர்தல் தொகுதிகளில் ரூ.223 கோடி பறிமுதலாகி இருப்பதாக EC கூறியுள்ளது. 2019 தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது 7 மடங்கு அதிகமெனவும் குறிப்பிட்டுள்ளது.
Similar News
News November 20, 2024
உணவில் புரதம் ஏன் முக்கியமானது?
உடலுக்கு முக்கிய சக்தியான புரதம், அமினோ அமிலங்கள் எனப்படும் சிறிய மூலக்கூறுகளால் ஆனது. தசைகள், தோல், முடி போன்ற உடல் பாகங்களின் வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியம். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு போதுமான அளவு புரதத்தை உட்கொள்வது முக்கியமானது. உணவில் புரதத்தின் அளவை அதிகரிக்க, இறைச்சி, முட்டை, பால், மீன், பருப்புகள், பருப்பு வகைகள் மற்றும் கோதுமையை உள்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.
News November 20, 2024
T20 WC: பாகிஸ்தான் செல்ல மத்திய அரசு அனுமதி மறுப்பு
இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. பாகிஸ்தானில் நவம்பர் 23 முதல் டிசம்பர் 3 வரை பார்வையற்றோர் T20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க இந்திய பார்வையற்ற கிரிக்கெட் அணி, மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தது. தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் இந்திய அணியின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
News November 20, 2024
தமிழில் எல்.ஐ.சி இணையதளம்: ஓபிஎஸ்
தமிழில் எல்.ஐ.சி இணையதளத்தை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். எல்ஐசி இணையதள முகப்பு பக்கம் ஹிந்தியில் மாற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், இந்தி திணிப்பை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார். இருமொழி கொள்கையில் உறுதியாக இருப்பதாகவும், விருப்பம் உள்ளவர்கள் ஹிந்தி கற்றுக்கொள்வதில் தவறில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.