News August 17, 2025

டெய்லி எவ்வளவு நேரம் போன் யூஸ் பண்றீங்க’னு தெரியணுமா?

image

ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் நீங்க போன் யூஸ் பண்றீங்க’னு, எந்த App-ல் மூழ்கி போயிருக்கீங்க’னு தெரிஞ்சிக்கணுமா? உங்க போனிலேயே இந்த தகவலை தெரிந்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டு போன்களில் Settings-> Digital Wellbeing option சென்று பாருங்க. இது Iphone-களில் Screen Time app and the Attentive app என்ற பெயரில் இருக்கிறது. நீங்க எவ்வளவு நேர விரையும் பண்றீங்க என புரியும். SHARE IT.

Similar News

News December 13, 2025

பண மழை கொட்டும் 3 ராசிகள்

image

சூரிய பகவான் தனுசு ராசியில் நுழைவதால் டிச.16-ம் தேதி மகாதன ராஜயோகம் உருவாகும் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், 3 ராசியினருக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறதாம். *மேஷம்: தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும். *விருச்சிகம்: பண பிரச்னைகள் முடிவுக்கு வரும். அரசு தேர்வு எழுதியவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். *கும்பம்: பண வரவு அதிகரிக்கும். வேலையில் முன்னேற்றம் இருக்கும்.

News December 13, 2025

இயக்குநர் செல்வராகவனுக்கு விவாகரத்தா?

image

பிரபல இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அவரது மனைவி கீதாஞ்சலி தனது இன்ஸ்டாவில் இருந்து செல்வராகவனின் அனைத்து போட்டோவையும் டெலிட் செய்துள்ளதை தொடர்ந்து இச்செய்தி சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருவருக்கும் 2011-ம் ஆண்டு திருமணமானது குறிப்பிடத்தக்கது.

News December 13, 2025

ஐசிசி விருது பெறுகிறாரா கிங் கோலி?

image

2025-ம் ஆண்டுக்கான சிறந்த ODI வீரருக்கான விருது பட்டியலில் கோலி இடம்பிடித்துள்ளார். 2025-ல் 651 ரன்கள் எடுத்துள்ளதோடு அதிக சதமடித்த (52) வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். 2017, 2018, 2023-லும் இவ்விருதை கோலி பெற்றுள்ளார். பட்டியலில் ஜோ ரூட், ஹோப், மேட் ஹென்றி, மிட்செல் சாண்ட்னர் உள்ளிட்டோர் இருக்கின்றனர். 650 ரன்கள் அடித்தும் பட்டியலில் ரோஹித் இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

error: Content is protected !!