News September 13, 2024
காவல்துறை அமைச்சரிடமே ஆட்டையை போட்ட திருடன்

இங்கிலாந்தில் காவல்துறை அமைச்சரின் Bag திருடப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. வருடாந்திர போலீஸ் மாநாட்டில் அமைச்சர் டேம் டயானா ஜான்சன் பங்கேற்று, மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து வந்தார். அப்போது அவரது பை திருடப்பட்டது பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதனிடையே, சந்தேகத்திற்குரிய நபரை கைது செய்த போலீசார், விசாரணைக்கு பின் பிணையில் விடுவித்தனர்.
Similar News
News November 8, 2025
அதிமுகவில் இருந்து கூண்டோடு விலக முடிவு!

செங்கோட்டையனின் <<18222737>>ஆதரவாளர்களான Ex MP சத்யபாமா<<>> உள்ளிட்டோரை நேற்று கட்சியிலிருந்து EPS நீக்கினார். அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க செங்கோட்டையன் வலியுறுத்தியிருந்தார். இது குறித்து அதிமுக தலைமை எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனால், செங்கோட்டையனின் பலத்தை நிரூபிக்கும் வகையில் ஈரோட்டில் இன்று ‘Mass Resignation’ என்ற பெயரில் பலரும் ராஜினாமா கடிதத்தை தலைமைக்கு அனுப்ப உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
News November 8, 2025
போர் நிறுத்தத்தில் டிரம்ப் தலையிடவில்லை: ராஜ்நாத் சிங்

தானே இந்தியா-பாக்., போரை நிறுத்தியதாக டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில், போர் நிறுத்தம் இந்தியா – பாக்., இடையில் மட்டுமே இருந்ததாகவும், எந்த 3-ம் தரப்பினரும் மத்தியஸ்தத்தில் ஈடுபடவில்லை எனவும் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாக்.,-யிடம் இருந்து போரை நிறுத்த தொடர்ந்து அழைப்புகள் வந்ததால் தான், சண்டை நிறுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
News November 8, 2025
பெருங்குடல் புற்றுநோய்; இந்த உணவுகளை தவிருங்கள்

இன்றைய காலக்கட்டத்தில் இருக்கும் மோசமான உணவு பழக்கத்தால், இளைஞர்களை கூட பெருங்குடல் புற்றுநோய் அதிகமாக பாதிக்கிறது. இதை முன்பே கண்டறியாமல் விட்டால் உயிரையே கொள்ளும். இதனை தடுக்க சில உணவுகளை அடிக்கடி உண்பதை நாம் தவிர்க்க வேண்டும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அது என்னென்ன உணவுகள் என்பதை தெரிந்துகொள்ள மேலே உள்ள போட்டோக்களை SWIPE பண்ணுங்க. அனைவரும் நலமாக இருக்க SHARE THIS.


