News August 26, 2024
தெய்வீக லட்சியங்களுக்கு அர்ப்பணிப்போம்: ஜனாதிபதி

கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு வாழ்த்து கூறியுள்ளார். ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக லட்சியங்களுக்கு நம்மை அர்ப்பணிக்க இந்த விழா நம்மை தூண்டுவதாக குறிப்பிட்டுள்ள அவர், கிருஷ்ணன்-அர்ஜுனன் இடையிலான உரையாடல் மனிதகுலத்திற்கு உத்வேகம் மற்றும் அறிவொளியின் நித்திய ஆதாரம் என்றுள்ளார். மேலும், நாட்டின் முன்னேற்றம், செழிப்புக்காக உழைக்க உறுதியளிப்பதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News December 27, 2025
டிசம்பர் 27: வரலாற்றில் இன்று

*1911 – ‘ஜன கண மன’ முதன்முதலில் கொல்கத்தாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் இசைக்கப்பட்டது.
*1956 – தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
*1968 – சந்திரனுக்கான முதலாவது மனித விண்வெளிப் பயண கப்பலான அப்பல்லோ 8, வெற்றிகரமாக பசிபிக் கடலில் இறங்கியது.
*2008 – காசா மீது மூன்று வாரத் தாக்குதலை இஸ்ரேல் ஆரம்பித்தது.
News December 27, 2025
கூலி படத்தின் விமர்சனத்தை ஏற்ற லோகேஷ்

‘கூலி’ படத்திற்கு ஆயிரம் விமர்சனங்கள் வந்தது, அதை தான் ஏற்றுக்கொண்டதாக லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். ரஜினி உள்பட மல்டிஸ்டார் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், இதுபற்றி பேசியுள்ள லோகேஷ், விமர்சனங்களில் இருந்து கற்று, அடுத்த படத்தில் அவ்வாறு செய்யக்கூடாது என்று இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மீண்டும் கம்பேக் கொடுப்பாரா லோகேஷ்?
News December 27, 2025
நாளை டிரம்ப்பை சந்திக்கிறார் ஜெலன்ஸ்கி

நாளை USA-ன் ஃபுளோரிடாவில் அதிபர் டிரம்பை சந்திக்கவுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப்பால் முன்மொழியப்பட்ட 20 நிபந்தனைகளில் 90%-ஐ ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், இந்த சந்திப்பின்போது வர்த்தகம் உள்பட பிற விவகாரங்கள் பற்றியும் பேசவுள்ளதாக தெரிவித்துள்ளார். விரைவில் போர் முடிவுக்கு வருமா?


