News May 23, 2024

வாட்ஸ்அப்பில் வருகிறது AI வசதி

image

வாடிக்கையாளர்களை தக்கவைக்க வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு அம்சங்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் பயனாளர்கள் தனித்துவமான profile photo உருவாக்கும் அம்சத்தை வாட்ஸ்அப் செயலி சோதித்து வருகிறது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக தனது புகைப்படங்களை profileஇல் வைக்க விரும்பாத பயனாளர்களுக்கு இந்த அம்சம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News August 18, 2025

ஏறுமுகத்தில் இந்திய சந்தைகள்.. யார் யாருக்கு லாபம்?

image

GST வரியில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்தியப் பங்குச்சந்தைகள் உயர்வை கண்டுள்ளன. காலையில் சுமார் 1,000 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கிய Sensex 676 புள்ளிகள் உயர்ந்து 81,273 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. அதேபோல், Nifty 245 புள்ளிகள் உயர்ந்து 24,876 புள்ளிகளாக நீடிக்கிறது. Maruti Suzuki, Bajaj Auto உள்ளிட்ட நிறுவனங்களில் பங்குகள் கடும் உயர்வை கண்டுள்ளன.

News August 18, 2025

BSF-ல் 3,580 பணியிடங்கள் அறிவிப்பு

image

எல்லை பாதுகாப்பு படையில் (BSF) உள்ள பெயிண்டர், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட பணிகளுக்கான கான்ஸ்டபிள் (Tradesman) பதவிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியிடங்கள்: 3,588. கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு/ ITI. வயது வரம்பு: 18 – 25. சம்பளம்: ₹21,700 – ₹69,100. எழுத்து, உடல் திறன் உள்ளிட்ட தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.23. விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும்.

News August 18, 2025

CINEMA ROUNDUP: மீண்டும் காக்கி உடை அணியும் சூர்யா!

image

★ஆகஸ்ட் 20-ம் தேதி அனுஷ்காவின் ‘காட்டி’ படத்திலிருந்து ‘தசோரா’ பாடல் ரிலீசாகவுள்ளது.
★அட்லீ- அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி வரும் படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
★அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘பாம்ப்’ படம் வரும் செப்டம்பர் 12-ம் தேதி வெளியாகவுள்ளது.
★‘ஆவேசம்’ பட இயக்குநர் ஜீது மாதவன் இயக்கும் படத்தில் சூர்யா போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ளாராம்.

error: Content is protected !!