News October 11, 2025
90 பேருக்கு இன்று கலைமாமணி விருது வழங்கும் CM ஸ்டாலின்

TN அரசின் இயல், இசை, நாடக மன்றத்தின் மூலம் 2021, 2022, 2023-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை 90 பேருக்கு CM ஸ்டாலின் இன்று வழங்குகிறார். கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில், நடிகர்கள் SJ சூர்யா, விக்ரம் பிரபு, நடிகைகள் சாய் பல்லவி, மெட்டி ஒலி காயத்ரி உள்ளிட்டோர் விருதுகளை பெற உள்ளனர். மேலும், பாரதியார் விருது, MS சுப்புலட்சுமி விருது, பாலசரஸ்வதி விருதும் வழங்கப்படவுள்ளன.
Similar News
News October 11, 2025
கடன் தொல்லை நீங்க… சனிக்கிழமை இத செய்யுங்க

ஸ்ரீமகாவிஷ்ணுவின் எல்லா அவதாரங்களிலும் உடனிருந்து தீமைகளை அழித்தவர் சுதர்சனர் (எ) சக்கரத்தாழ்வார். வாழ்வில் ஒளிதரும் அவரது திருவருள் இருந்தால், கடன் இல்லாத வாழ்க்கை அமையுமாம். சனிக் கிழமைகளில் பெருமாள் கோயிலுக்கு சென்று அங்குள்ள ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்கு துளசி மாலை சாத்தி, 12 முறை வலம் வந்து ‘ஸ்ரீசுதர்சன மஹா’ மந்திரம் பாடி மனமுருகி வேண்டினால் கடனால் உண்டான சங்கடம் நீங்கும் என்பது நம்பிக்கை.
News October 11, 2025
ரிலையன்ஸ் குழும முக்கிய நிர்வாகி கைது

அனில் அம்பானிக்கு நெருக்கமானவரும், ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியுமான அசோக் குமார் பால் என்பவரை ED கைது செய்துள்ளது. தொடர்ந்து, 2 நாள்கள் கஸ்டடியில் எடுக்கப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்திடம் போலி வங்கி உறுதிச் சான்றிதழை அளித்து இவர் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
News October 11, 2025
ஆட்சியில் பங்கு, அதிக சீட்டு: காங்., எம்.பி. உறுதி

தமிழகத்தில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது அனைத்து காங்கிரஸ் கட்சியினரின் விருப்பமாகும் என்று கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். திமுக – காங்., இடையே தொடர்ந்து சில சலசலப்புகள் இருந்து வரும் நிலையில், வரும் தேர்தலில் அதிக சீட்டுகளை கேட்டு வாங்குவதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது என்று விஜய் வசந்த் குறிப்பிட்டுள்ளார்.