News October 11, 2025
90 பேருக்கு இன்று கலைமாமணி விருது வழங்கும் CM ஸ்டாலின்

TN அரசின் இயல், இசை, நாடக மன்றத்தின் மூலம் 2021, 2022, 2023-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை 90 பேருக்கு CM ஸ்டாலின் இன்று வழங்குகிறார். கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில், நடிகர்கள் SJ சூர்யா, விக்ரம் பிரபு, நடிகைகள் சாய் பல்லவி, மெட்டி ஒலி காயத்ரி உள்ளிட்டோர் விருதுகளை பெற உள்ளனர். மேலும், பாரதியார் விருது, MS சுப்புலட்சுமி விருது, பாலசரஸ்வதி விருதும் வழங்கப்படவுள்ளன.
Similar News
News November 17, 2025
பிளவக்கல் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

வத்ராப் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள பிளவக்கல் அணை மூலம் 17 வருவாய் கிராமங்களில் உள்ள 40 கண்மாய் நிரம்பி 7,219 ஏக்கர் விவசாய நிலம், பெரியாறு பிரதானக கால்வாய் மூலம் 960 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. தொடர் மழை காரணமாக 47 அடி கொண்ட பிளவக்கல் அணை 41 அடியை தாண்டியது. இதையடுத்து அணையில் இருந்து இன்று காலை 10.30 மணிக்கு அமைச்சர் KKSSRR ராமச்சந்திரன் தண்ணீரை திறந்து வைக்கிறார்.
News November 17, 2025
திண்டுக்கல்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <
News November 17, 2025
தொழில் தொடங்க ₹50 லட்சம் தரும் அரசு திட்டம்

உற்பத்தி மற்றும் சேவைத் துறையில், தொழில் தொடங்குபவர்களுக்கு மத்திய அரசின் PMEGP திட்டம் ₹50 லட்சம் வரை கடன் வழங்குகிறது. பெறப்படும் கடனுக்கு 35% மானியமாக வழங்கப்படுகிறது. கடனை அடைக்க 7 ஆண்டுகள் வரை நேரம் கொடுக்கப்படும். 8-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் இந்த திட்டத்திற்கு <


