News September 30, 2025
கனடா வெளியுறவு அமைச்சர் – ஜெய்சங்கர் சந்திப்பு

கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் அனிதா ஆனந்தை, ஜெய்சங்கர் நியூயார்க்கில் சந்தித்துள்ளார். கடந்த மே மாதத்தில் தான், புதிய வெளியுறவு அமைச்சராக அனிதா பொறுப்பேற்றார். மேலும், காலிஸ்தான் தலைவர் கொல்லப்பட்டதற்கு இந்தியாவே பொறுப்பு என்ற கனடா முன்னாள் பிரதமரின் குற்றச்சாட்டுக்கு அடுத்து, முதல்முறையாக இச்சந்திப்பு நடந்துள்ளது. இது இருதரப்பு உறவை வலுப்படுத்தும் என்று அனிதா கூறியுள்ளார்.
Similar News
News September 30, 2025
BREAKING: கட்சி பதவியில் இருந்து நீக்கினார் இபிஎஸ்

செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 40 பேரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பு என்ற கலகக்குரல் எழுப்பியதால், செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்டது. ஆனால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை. இருப்பினும் ஒருங்கிணைப்பு விவகாரத்தை அவர் தீவிரமாக கையில் எடுத்துள்ளார். இதற்கிடையில் செங்கோட்டையனின் 13 ஆதரவாளர்களின் பதவி ஏற்கெனவே பறிக்கப்பட்ட நிலையில், தற்போது 40 பேரை பதவியில் இருந்து EPS நீக்கியுள்ளார்.
News September 30, 2025
முன்னாள் எம்பி காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் MP-யுமான விஜய் குமார் மல்ஹோத்ரா வயது மூப்பு காரணமாக காலமானார். 2 முறை MLA-வாகவும், 5 முறை MP-யாகவும் விஜய் மல்ஹோத்ரா பணியாற்றியுள்ளார். 1999-ம் ஆண்டு லோக் சபா தேர்தலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை தோற்கடித்தவர் இவர். அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். PM மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
News September 30, 2025
விஜய்க்கு துரை வைகோ கொடுத்த அட்வைஸ்

மற்ற கட்சிகளை போல தனது தொண்டர்களை கட்டுப்படுத்தி ஒருங்கிணைக்க, ஒரு அமைப்பை விஜய் உருவாக்க வேண்டும் என துரை வைகோ தெரிவித்துள்ளார். இது விஜய்யுடைய கட்சிக்கும் நல்லது, பொதுமக்களுக்கும் நல்லது, அரசுக்கும் நல்லது எனவும் அவர் தெரிவித்துள்ளார். கரூர் தவெக மாநாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்ததை சுட்டிக்காட்டி இதனை துரை வைகோ கூறியுள்ளார்.