News September 30, 2025
முன்னாள் எம்பி காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் MP-யுமான விஜய் குமார் மல்ஹோத்ரா வயது மூப்பு காரணமாக காலமானார். 2 முறை MLA-வாகவும், 5 முறை MP-யாகவும் விஜய் மல்ஹோத்ரா பணியாற்றியுள்ளார். 1999-ம் ஆண்டு லோக் சபா தேர்தலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை தோற்கடித்தவர் இவர். அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். PM மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 10, 2025
வங்கிக் கணக்கில் பணம்.. பிரதமர் மோடி அறிவித்தார்

இந்திய வங்கிகளில் உள்ள ₹78,000 கோடி உரிமை கோரப்படாத பணத்தை கஸ்டமர் (அ) குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக PM மோடி அறிவித்துள்ளார். ‘Your Money, Your Right’ திட்டத்தில் ₹2,000 கோடி உரியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வங்கிகளில் உள்ள பணத்தை எடுக்க <
News December 10, 2025
காங்., அமமுக விருப்ப மனுக்கள் விநியோகம்

2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்நிலையில், அமமுக & காங்., கட்சிகள், இன்று முதல் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனர். அமமுகவில் தமிழகத்தில் போட்டியிட ₹10,000, புதுச்சேரிக்கு ₹5,000 செலுத்தி விருப்ப மனுவை பெறலாம். காங்.,கில் கட்டணமின்றி விருப்ப மனுக்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விருப்பமுடையவர்கள் மனுக்களை வாங்கி வருகின்றனர்.
News December 10, 2025
எந்த ஷா வந்தாலும் முடியாது: மு.க.ஸ்டாலின் சவால்

தேனாம்பேட்டையில் நடந்த ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ பரப்புரை நிகழ்ச்சியில் ஸ்டாலின் பங்கேற்றார். இதுதொடர்பான புகைப்படங்களை X பக்கத்தில் வெளியிட்ட அவர், ‘எந்த ஷா வந்தாலென்ன, எத்தனை திட்டம் போட்டாலென்ன. டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்கு தக்க பாடம் புகட்டும்’ என்று சூளுரைத்துள்ளார்.


