News September 30, 2025

BREAKING: கட்சி பதவியில் இருந்து நீக்கினார் இபிஎஸ்

image

செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 40 பேரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பு என்ற கலகக்குரல் எழுப்பியதால், செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்டது. ஆனால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை. இருப்பினும் ஒருங்கிணைப்பு விவகாரத்தை அவர் தீவிரமாக கையில் எடுத்துள்ளார். இதற்கிடையில் செங்கோட்டையனின் 13 ஆதரவாளர்களின் பதவி ஏற்கெனவே பறிக்கப்பட்ட நிலையில், தற்போது 40 பேரை பதவியில் இருந்து EPS நீக்கியுள்ளார்.

Similar News

News December 9, 2025

விபத்தில் சிக்கி பிரபல நடிகர் காயம்

image

‘இதுதாண்டா போலீஸ்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான நடிகர் ராஜசேகர், ஷூட்டிங்கின்போது விபத்தில் சிக்கியது தாமதமாக தெரியவந்துள்ளது. கடந்த 25-ம் தேதி சண்டைக் காட்சியின்போது, ​​நடந்த விபத்தில் அவரது வலது குதிகாலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக ஹாஸ்பிடலுக்கு கொண்டு செல்லப்பட்டு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சுமார் 4 வார ஓய்வுக்குப்பின் அவர் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.

News December 9, 2025

₹35,400 சம்பளம்.. நாளையே கடைசி: APPLY

image

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள ஜூனியர் இன்ஜினியர் உள்ளிட்ட 2,569 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. கல்வித்தகுதி: டிப்ளமோ, டிகிரி. வயது வரம்பு: 18 – 33. சம்பளம்: ₹35,400 முதல் Level 6 அடிப்படையில் வழங்கப்படும். தேர்வு முறை: Tire 1 & 2, சான்றிதழ் சரிபார்ப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.10. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். ஷேர் பண்ணுங்க.

News December 9, 2025

அமெரிக்காவில் இந்திய அரிசிக்கு புதிய வரியா?

image

இந்திய பொருள்களுக்கு USA-வில் ஏற்கெனவே 50% வரி விதிக்கப்பட்ட நிலையில், இந்திய அரிசிக்கு புதிய வரி விதிக்க பரிசீலிப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்திய அரசு மானியங்கள் வழங்கி, USA சந்தையில் அரிசியை குறைந்த விலைக்கு விற்பதால், நஷ்டம் ஏற்படுவதாக USA விவசாயிகள் டிரம்ப்பிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனை ‘ஏமாற்று வேலை’ என்று விமர்சித்த டிரம்ப், புதிய வரி விதிக்க திட்டமிட்டுள்ளார்.

error: Content is protected !!