News August 17, 2025
அரசியலுக்கு வர வாய்ப்பு: சோனியா அகர்வால்

விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிறகு பல சினிமா பிரபலங்களின் அரசியல் விருப்பம் வெளிப்பட்டு வருகிறது. அதில் சிலர் தவெகவிலும் இணைந்தனர். அந்த வகையில், அரசியலில் நுழையும் வாய்ப்பு இருப்பதாக சோனியா அகர்வால் தெரிவித்துள்ளார். தவெகவில் இணைவீர்களா எனக் கேட்டதற்கு சிரித்துக் கொண்டே நழுவினார். இருப்பினும், சூழ்நிலையை பொறுத்து முடிவெடுப்பேன் எனவும் அவர் உறுதியளித்தார். சோனியா அரசியலுக்கு வரலாமா?
Similar News
News March 30, 2026
வேட்பாளர்களை அறிவித்தார் ராமதாஸ்

சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். அதன்படி *அருள் – சேலம் மேற்கு, *முரளி சங்கர் – வந்தவாசி, *ம.க.ஸ்டாலின் – கும்பகோணம், *E.K.சுரேஷ் – விருத்தாசலம், *பாக்கம் சக்திவேல் – மயிலாடுதுறை ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். <<-se>>#TNElection2026<<>>
News March 30, 2026
நாளை மறுநாள் பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் ஆணை

பங்குனி உத்திர விழாவையொட்டி, நாளை மறுநாள் (ஏப்.1-ம் தேதி) தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படாது. அதேபோல், நார்த்தாமலை தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்.6-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். முழு ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. SHARE IT
News March 30, 2026
1 கேஸ் சிலிண்டர் ₹6,500.. அதிர்ச்சி தகவல் வெளியானது

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறது. ஆனால், சென்னையில் தட்டுப்பாடு காரணமாக வணிக சிலிண்டர் கள்ளச் சந்தையில் ₹6,500 வரை விற்கப்பட்டு வருவதாக ஹோட்டல் நடத்துபவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், உணவு பொருள்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலை இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். உங்க ஊரில் டீ, காஃபி விலை உயர்த்தப்பட்டுள்ளதா?


