News August 18, 2025
மத்திய அரசின் உயரிய பொறுப்புகளில் தமிழர்கள்!

நாட்டின் 2-வது உயரிய பொறுப்பான துணை ஜனாதிபதிக்கான ரேஸில் சி.பி.ராதாகிருஷ்ணனை பாஜக களமிறக்கியுள்ளது. ஏற்கெனவே, மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சராக ஜெய்சங்கர், தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளத்துறை இணையமைச்சராக எல்.முருகன் ஆகியோர் பதவி வகிக்கின்றனர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு(1952–1962) பிறகு தமிழகத்தை சேர்ந்த ஒருவர் துணை ஜனாதிபதியாகும் வாய்ப்பு அமைந்துள்ளது.
Similar News
News December 11, 2025
ஈரோடு அருகே விபத்துள்:கட்டிட தொழிலாளி பலி!

ஈரோடு கவுந்தப்பாடி அருகே பாண்டியம்பாளையத்தை சேர்ந்தவர் மணியன் (65) கட்டிடத் தொழிலாளி. இவர் கவுந்தப்பாடி அருகே செட்டி கரடு என்ற இடத்தில் ஈரோடு சாலையை மொபட்டில் கடந்தார் அப்போது கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரை சேர்ந்த ராஜேஷ் (45) ஓட்டி வந்த கார் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த மணியன் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனை கொண்டும் செல்லும் வழியில் இறந்தார்.இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 11, 2025
கார் விபத்தில் நடிகை மரணம்

The Marvelous Mrs Maisel (amazon prime), நியூ ஆம்ஸ்டர்டாம் படங்களில் நடித்து பிரபலமான நடிகை வென்னே ஆல்டன் டேவிஸ் (60) கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். நியூயார்க்கில் சாலையை கடக்க முயன்றபோது டேவிஸ் மீது எதிரே வந்த கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News December 11, 2025
சென்னையில் 36 இண்டிகோ விமானங்கள் ரத்து

DGCA-வின் <<18476353>>புதிய விதிமுறைகளை<<>> நடைமுறைப்படுத்த முடியாமல் திணறி வரும் இண்டிகோ, இன்றும் பல விமானங்களை ரத்து செய்துள்ளது. குறிப்பாக சென்னையில் இருந்து புறப்படும்(24), மற்றும் சென்னைக்கு வரும்(12) 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்று 70 விமானங்கள் ரத்தான நிலையில், அது தற்போது பாதியாக குறைந்துள்ளது கவனிக்கதக்கது. விரைவில் நிலைமை முற்றிலும் சீராகும் என இண்டிகோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


