News August 6, 2025

EPS-க்கு உடல்நலக்குறைவு.. நாளைய கூட்டங்கள் ரத்து!

image

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நாளைய பரப்புரைக் கூட்டங்களை EPS ரத்து செய்துள்ளார். தென் மாவட்டங்களில் தீவிர பரப்புரை மேற்கொண்டு அவருக்கு தொண்டை வலி, உடல் சோர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், உடல்நலன் கருதி ராஜபாளையத்தில் நாளை திட்டமிட்டிருந்த கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News August 7, 2025

இன்றே கடைசி… 6,238 ரயில்வே பணிகள்

image

ரயில்வேயில் 6,238 டெக்னீசியன் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஆக.07) கடைசி நாளாகும். கிரேடு-1 பதவியில் 183 பணியிடங்கள், கிரேட்-3 பதவிகளுக்கு 6,055 பணியிடங்கள் உள்ளன. வயது: 18 முதல் 30 வரை. சம்பளம்: பதவியை பொறுத்து ₹19,900 முதல் ₹29,200 வரை. எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் ஆள்தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் செய்யவும்.

News August 7, 2025

பந்து சேதம்? இந்திய வீரர்கள் மீது Ex பாக்., பவுலர் புகார்

image

IND VS ENG இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா அபாரமாக பந்துவீசி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்திய வீரர்கள் பந்தின் பளபளப்புக்காக வாஸ்லின் தடவி இருக்கலாம் என Ex பாக்., பவுலர் ஷபீர் அகமது குற்றஞ்சாட்டியுள்ளார். 80 ஓவர்கள் முடிந்த பின்பும் பந்து பளபளப்பாக இருந்ததாக கூறிய அவர், அந்த பந்துகளை ஐசிசி பரிசோதிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

News August 7, 2025

விமர்சன வீடியோ: கோபி, சுதாகர் மீது புகார்

image

கவின் ஆணவக் கொலையை மையமாக வைத்து யூடியூப்பில் பரிதாபங்கள் சேனல் அண்மையில் வீடியோ வெளியிட்டனர். இந்த வீடியோவில் இரு சமூகத்தினர் இடையே பிரச்னையை உருவாக்கும் வகையில் பல கருத்துக்கள் இருப்பதாகவும், குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருப்பதாகவும் அதனை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோவை போலீஸில் தனுஷ்கோடி என்பவர் புகாரளித்துள்ளார். பரிதாபங்கள் வீடியோ பற்றி உங்கள் கருத்தென்ன?

error: Content is protected !!