News August 6, 2025
EPS-க்கு உடல்நலக்குறைவு.. நாளைய கூட்டங்கள் ரத்து!

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நாளைய பரப்புரைக் கூட்டங்களை EPS ரத்து செய்துள்ளார். தென் மாவட்டங்களில் தீவிர பரப்புரை மேற்கொண்டு அவருக்கு தொண்டை வலி, உடல் சோர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், உடல்நலன் கருதி ராஜபாளையத்தில் நாளை திட்டமிட்டிருந்த கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News November 8, 2025
இடி மின்னலால் தடைபட்ட IND VS AUS ஆட்டம்

இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இடி மின்னலின் தாக்கத்தால் வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போட்டி நிறுத்தப்பட்டது. அதேசமயம் தற்போது வரை மழை பெய்யாததால் விரைவில் ஆட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி 4.5 ஓவர்களில் 52 ரன்களை எடுத்துள்ளது.
News November 8, 2025
BREAKING: வீடியோவை கொடுத்தார் விஜய்!

கரூர் பிரசாரத்தின் போது விஜய் பயணித்த பஸ்ஸின் சிசிடிவி காட்சிகளை தான்தோன்றிமலை சிபிஐ அலுவலகத்தில் விஜய் தரப்பு ஒப்படைத்தது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணையில், பிரசார பஸ் சிசிடிவி காட்சிகளை 3 நாள்களுக்குள் சமர்ப்பிக்க சிபிஐ கோரியிருந்தது. இந்நிலையில், அது தொடர்பான காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்கை தவெக அலுவலகத்தின் உதவியாளர் குரு, சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
News November 8, 2025
ஆஸ்கர் அருங்காட்சியகத்தில் முதல் இந்திய படம்!

ஆஸ்கர் வழங்கும் அகாடமி அமைப்பு, சினிமா துறைக்கென உருவாக்கிய மியூசியம், அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் மியூசியம். இங்கு இதுவரை எந்த இந்திய படமும் திரையிடப்பட்டது இல்லை. ஆனால், இந்த குறையை நீக்கி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது ‘பிரமயுகம்’. ராகுல் சதாசிவன் இயக்கத்தில், மம்மூட்டி நடிப்பில் வெளியான பிரமயுகம், இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.


