News April 6, 2024
அண்டை நாடுகளை இந்தியா ஆக்கிரமிக்காது

இந்தியா தனது அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தவோ, ஆக்கிரமிக்கவோ செய்யாது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், அண்டை நாடுகள் தொடர்பாக இந்தியா ஆரம்பம் முதல் ஒரே கொள்கையை கடைபிடித்து வருவதாகவும், அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறினார். அதேநேரத்தில் இந்தியா தனக்கு எதிரான செயல்களை அமைதியாக வேடிக்கை பார்க்காது என்றும் அவர் தெரிவித்தார்.
Similar News
News November 11, 2025
நேற்று மீண்டு, இன்று வீழ்ந்த பங்குச்சந்தைகள்!

கடந்த வாரத்தில் சரிவிலிருந்த பங்குச்சந்தைகள் நேற்று மீண்டு வந்த நிலையில், இன்று சரிவைக் கண்டுள்ளன. சென்செக்ஸ் 168 புள்ளிகள் சரிந்து 83,367 புள்ளிகளிலும், நிஃப்டி 53 புள்ளிகள் சரிந்து 25,250 புள்ளிகளிலும் தற்போது வர்த்தகமாகின்றன. HDFC Bank, Bajaj Finance, Tata Steel உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்துள்ளன.
News November 11, 2025
நடிகர் தர்மேந்திரா மறைவா? மகள் மறுப்பு

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா(89) உயிரிழந்ததாக India Today உள்ளிட்ட தேசிய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. இந்நிலையில், தர்மேந்திரா உயிரிழக்கவில்லை என்று அவரது மகள் ஈஷா தியோல் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுவரும் அவரின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாக கூறியுள்ள அவர், தர்மேந்திரா குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்யவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
News November 11, 2025
ஹஜ் யாத்திரைக்கு இந்தியா புதிய ஒப்பந்தம்!

அரசு முறைப் பயணமாக சவுதி அரேபியா சென்றுள்ள மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, அந்நாட்டு அமைச்சர் தஃபிக் பின் ஃபசான் அல் ராபியை ஜெட்டாவில் சந்தித்து பேசினார். அப்போது, இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், அடுத்தாண்டு இந்தியாவிலிருந்து 1,75,025 பேர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள இருதரப்பிலும் ஒப்பந்தம் கையெழுத்தானது.


