News April 24, 2025
அதிக சிக்சர்கள்.. சாதனை படைத்த ரோஹித் சர்மா..!

அதிக சிக்சர்கள் விளாசிய MI வீரர் என்ற பொல்லார்டின் சாதனையை ரோஹித் சர்மா முறியடித்துள்ளார். SRH உடனான நேற்றைய போட்டியில் அவர் 3 சிக்சர் விளாசினார். இதன்மூலம், மொத்தமாக MI அணிக்காக 260 சிக்சர் அடித்துள்ள அவர், பொல்லார்டின் (258) சாதனையை முறியடித்துள்ளார். அதுமட்டுமின்றி, ஒட்டுமொத்தமாக 456 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா, 12,000 ரன்களை கடந்தும் அசத்தியுள்ளார்.
Similar News
News April 24, 2025
கும்பகோணத்தில் ‘கலைஞர் பல்கலைக்கழகம்’

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் விரைவில் புதிய பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க காங்கிரஸ், பாமக, விசிக, தமாக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை வைத்ததாகவும், பல்கலைக்கழகங்களுக்கு எல்லாம் பல்கலைக்கழகமாக திகழ்ந்து கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டவருக்கு செய்யும் கவுரவம் என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
News April 24, 2025
ஸ்ரீநகருக்கான விமானக் கட்டணம் பாதியாக சரிவு

பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக, ஸ்ரீநகருக்கான விமானக் கட்டணம் சரிந்துள்ளது. டெல்லி-ஸ்ரீநகருக்கு சென்று வரும் கட்டணம் ரூ.24,000 வரை அதிகரித்திருந்தது. ஆனால் பஹல்காம் தாக்குதலால் பயணிகள் முன்பதிவை ரத்து செய்தது உள்ளிட்டவற்றால் ரூ.11,200ஆக சரிந்துள்ளது. இதேபோல், சென்னை-ஸ்ரீநகர் இடையேயான கட்டணம் ரூ.19,960ஆக இருந்தது. அக்கட்டணம் 51% சரிந்து ரூ.9,775ஆக குறைந்துள்ளது.
News April 24, 2025
+2-க்கு அப்புறம் டிஜிட்டல் மார்க்கெட்டிங்

எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில், டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிப்பு ஒரு சூப்பர் சாய்ஸ். டிப்ளமோவில் தொடங்கி முதுகலை படிப்பு வரை இருக்கிறது. Market Research Analyst, Content Marketer/Manager என பல வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. தொடக்க சம்பளமாகவே ₹25,000 – ₹40,000 வரை வழங்கப்படுகிறது. ஃபேஸ்புக், கூகுள் தளங்களில் இலவசமாக கிளாஸ் எடுக்கப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.