News August 18, 2025
வீண் செலவுகளுக்கு தமிழகம் முதலிடம்: அன்புமணி

மாநிலத்தின் வளா்ச்சிக்குத் தேவையான மூலதனச் செலவுகளை செய்வதில் பின்தங்கியுள்ள தமிழக அரசு, வீண் செலவுகளைச் செய்வதில் முதலிடத்தில் இருப்பதாக அன்புமணி விமர்சித்துள்ளார். நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் மூலதனம் உருவாக்குவதற்காக ₹4,155.74 கோடி மட்டுமே செலவிட்டிருப்பதாகவும், இது கடந்த நிதியாண்டைவிட 17.57% குறைவு என்றும் தெரிவித்துள்ளார். பிற மாநிலங்களில் இது உயர்ந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 12, 2025
திருப்பரங்குன்றத்தால் திருப்பம் வரும்: நயினார்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வாக்குவங்கிக்காகவே கோர்ட் தீர்ப்பை திமுக மதிக்கவில்லை என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். கருத்து கணிப்புகளில் கூட திமுக ஆட்சி மிகவும் பின் தங்கியுள்ளதாக கூறிய அவர், 2026 தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி தான் வெற்றிபெறும் என்று குறிப்பிட்டார். திருப்பரங்குன்றம் விவகாரத்தால், இந்த ஆட்சிக்கே திருப்பம் வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News December 12, 2025
மக்கள் நாயகன் காலமானார்

‘பறவை மனிதர்’ என அன்போடு அழைக்கப்பட்ட ஜோசப் சேகர் காலமானார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனது வீட்டின் மொட்டை மாடியில் இவர் அளிக்கும் உணவுக்காகவே தினந்தோறும் ஆயிரக்கணக்கான பறவைகள் குறிப்பாக கிளிகள் தேடி வரத்தொடங்கின. 20 ஆண்டுகளாக இந்த உன்னத பணியை செய்து வந்த அவர், கொரோனா காலத்தில் ஏழை எளிய மக்களுக்கும் உணவு அளித்து மக்களின் நாயகன் ஆனார். ஜோசப் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
News December 12, 2025
தாயின் சாதி அடிப்படையில் சாதி சான்றிதழ்: SC

இந்தியாவில் தந்தையின் சாதியை பொறுத்தே குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்நிலையில், வழக்கு ஒன்றில் சிறுமியின் எதிர்காலத்தை பாதுகாக்கும் விதமாக தாயின் சாதி அடிப்படையில் சான்றிதழ் வழங்க SC உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, இந்த குறிப்பிட்ட வழக்கிற்கு மட்டுமே பொருந்தும் என நீதிபதி கூறினாலும், எதிர்காலத்தில் விதிகளில் மாற்றத்தை ஏற்படுத்த முன்னுதாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


