News March 24, 2025
தங்கம் விலை சவரனுக்கு ₹120 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 3ஆவது நாளாகக் குறைந்துள்ளது. இன்று (மார்ச் 24) சவரனுக்கு ₹120 குறைந்துள்ளதால் 22 கேரட் ஒரு கிராம் ₹8,215க்கும், சவரன் ₹65,720க்கும் விற்பனையாகிறது. கடந்த 4 நாள்களில் சவரனுக்கு ₹760 குறைந்துள்ளது. அதேநேரம் வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ₹110க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,10,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Similar News
News March 29, 2025
என்கவுன்டரில் 15 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் இன்று அதிகாலை நடந்த தேடுதல் வேட்டையில் 15 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுக்மா – தண்டேவாடா எல்லையில் உள்ள வனப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் போது தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதாக சுக்மா மாவட்ட எஸ்.பி. கிரண் சவான் தெரிவித்துள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன்பு நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 22 பேர் உயிரிழந்தது கவனிக்கத்தக்கது.
News March 29, 2025
போதைக்கு அடிமையாகி Suicide செய்யும் இளைஞர்கள்

மாநிலத்தில் எந்த பக்கம் பார்த்தாலும் டாஸ்மாக் கடைகள் இருப்பதால், பல ஆண்கள் போதைக்கு அடிமையாகி தங்களின் குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்துகின்றனர். குறிப்பாக, வயது வித்தியாசம் இல்லாமல் குடிக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் இளம் வயதினர் போதைக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவதாக மன நல மருத்துவ சங்கத்தின் EX தலைவர் பன்னீர் செல்வம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
News March 29, 2025
தங்கம் விலை சவரனுக்கு ₹160 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 29) ₹160 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,360க்கும், சவரன் ₹66,880க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், வெள்ளி விலை கிராமுக்கு ₹1 குறைந்து ₹113க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,13,000க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த 4 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹1,400 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.