News August 23, 2025

திருமா – ராமதாஸ் சீக்ரெட் மீட்டிங்?

image

திமுக கூட்டணியில் பாமக இணைவதற்கு விசிக எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், தைலாபுரத்திற்கே சென்று திருமா, ராமதாஸை சந்தித்ததாக தகவல்கள் கசிகின்றன. இச்சந்திப்பில் திமுக கூட்டணியில் பாமக இணைவதற்கு தடை போடமாட்டேன் என திருமா சொன்னதாகவும், பாமகவை பிளவுபடுத்தும் பாஜகவின் திட்டத்தை முறியடிக்கும் நோக்கில், திருமா இதற்கு சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.

Similar News

News January 17, 2026

முன்னாள் அமைச்சர் பீமன்னா காந்த்ரே காலமானார்

image

சுதந்திரப் போராட்ட வீரரும், Ex அமைச்சருமான பீமன்னா காந்த்ரே(102) உடல் நலக்குறைவால் காலமானார். காங்கிரஸ் மூத்த தலைவரான இவர், கர்நாடகாவில் 4 முறை MLA, இருமுறை MLC ஆகவும் பதவி வகித்தார். 1992-ல் வீரப்ப மொய்லி தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், கர்நாடக மாநில காங்கிரஸில் பல முக்கிய பொறுப்புகளிலும் இருந்துள்ளார். #RIP

News January 17, 2026

திமுக அரசு கொடுத்த பால்கோவா: செல்லூர் ராஜு

image

அரசு ஊழியர்களுக்கு ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பால்கோவா கொடுத்து உள்ளது என செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் பேட்டியளித்த அவர், வரும் தேர்தலில் வாக்குகள் பெறுவதற்காக பொங்கலுக்கு திமுக அரசு பணம் கொடுத்துள்ளது என்றார். மேலும், போதை கலாசாரம் ஒழிய, சட்டம் ஒழுங்கு காக்கப்பட, விலைவாசி குறைய திமுக ஆட்சி விலக வேண்டும் என்பது கனவாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

News January 17, 2026

BREAKING: தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது

image

நேற்று சரிவைக் கண்ட தங்கம் விலை இன்று(ஜன.17) மீண்டும் உயர்வைக் கண்டுள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹50 உயர்ந்து ₹13,280-க்கும், சவரன் ₹400 அதிகரித்து ₹1,06,240-க்கும் விற்பனையாகிறது. <<18877216>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை 1 அவுன்ஸ்(28) 23 டாலர்கள் குறைந்திருந்தாலும், இந்திய சந்தையில் தங்கம் விலை இன்று உயர்வைக் கண்டுள்ளது.

error: Content is protected !!