News March 28, 2024
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 2D எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படமானது, சூர்யாவின் 44ஆவது படமாகும். மரத்தில் ரத்தம் வடியும் அம்பு மற்றும் காட்டுத் தீ எரியும் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், #LoveLaughterWar என்ற ஹேஷ்டேகும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
Similar News
News August 20, 2025
விரைவில் ஜெர்மனி செல்லும் CM ஸ்டாலின்

ஐரோப்பாவிலும் TN Rising மாநாட்டை நடத்தவுள்ளதால், CM ஸ்டாலின் ஜெர்மனி செல்ல உள்ளார் எனவும் இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் TRB.ராஜா தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்த அவர், 2024 முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொண்ட ஒப்பந்தங்களில் 80% வரை அமலுக்கு கொண்டு வந்து திமுக அரசு சாதனை படைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
News August 20, 2025
BREAKING: அனைத்து பள்ளிகளுக்கும்.. HAPPY NEWS

9 – 12-ம் வகுப்பு மாணவர்களிடையே வாழ்வியல் திறன்களோடு பன்முகத்திறனை ஊக்குவிக்கும் வகையில் கலைப்பட்டறையை அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம், அனைத்து பள்ளிகளிலும் போதை எதிர்ப்பு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், மாணவர்கள் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வை எடுத்துச் செல்லும் நல்ல உள்ளங்களாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
News August 20, 2025
மற்றொரு திசைத் திருப்பும் முயற்சியா?

எப்போதெல்லாம் அரசுகளுக்கு நெருக்கடி வருகிறதோ, அப்போதெல்லாம் புதிய சர்ச்சை உருவாக்கப்படும் என்பார்கள். தற்போது வாக்காளர் பட்டியல் சர்ச்சையை கையிலெடுத்து எதிர்க்கட்சிகள் போராட்டங்களை தொடங்கியுள்ளன. ராகுலும் ‘வோட் அதிகார்’ பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார். இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் ‘<<17462799>>PM, CM<<>> பதவிபறிப்பு மசோதாவை பாஜக அரசு கொண்டு வந்துள்ளதா என சில அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.