News April 24, 2025

அயோத்தி படத்தால் 500 குடும்பங்கள் பயன்: சசிகுமார்

image

அயோத்தி படத்தால் 500 குடும்பங்கள் பயனடைந்துள்ளதாக நடிகர் சசிகுமார் கூறியுள்ளார். விரைவில் வெளியாகவுள்ள டூரிஸ்ட் பேமிலி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், அயோத்தி படத்தால் விமானத்தில் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்லும் நடைமுறைகள் எளிதானதாகவும், அதற்காக ₹1 லட்சம் வரை மானியம் அளிப்பதாகவும், தனக்கே தெரியாமல் ஒரு நல்லது நடந்துள்ளது என்றும் பெருமைப்பட கூறியுள்ளார்.

Similar News

News August 18, 2025

பாக்கெட்டில் போன் வைப்பவரா? எச்சரிக்கை!

image

நீண்டநேரம் பாக்கெட்டில் மொபைல் வைத்திருப்பது, மடி மீது வைத்து லேப்டாப் பயன்படுத்துவது ஆகியவற்றால் குழந்தையின்மை மற்றும் ஆண்மைக்குறைவு ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. கொல்கத்தா பல்கலை., IRM நிறுவனங்கள் இணைந்து, 1200 ஆண்களிடம் 5 yrs நடத்திய ஆய்வில் இது உறுதியாகியுள்ளது. இந்த சாதனங்களில் இருந்து வெளியாகும் மின்காந்த கதிர்வீச்சும் வெப்பமும் விந்தணு உருவாக்க செல்களை பாதிப்பதால் இந்நிலை ஏற்படுகிறது.

News August 18, 2025

வீட்டிலிருந்தே இலவச மருத்துவ ஆலோசனை பெற வேண்டுமா?

image

சாமானிய மக்கள் இருக்கும் இடத்திலிருந்தே இலவசமாக மருத்துவ ஆலோசனை பெறும் வசதி இந்தியாவில் உள்ளது ▶இதற்கு e-Sanjeevani செயலியைப் பதிவிறக்கவும். ▶செயலிக்குள் Patient Registration-ஐ கிளிக் செய்து, உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் OTP-ஐ உள்ளிடுங்கள் ▶பிறகு பெயர், பிறந்த தேதி & முகவரியை வழங்கினால் SMS மூலம் Patient ID கிடைக்கும் ▶LogIn செய்து, வீடியோ காலில் மருத்துவர் இணையும் வரை காத்திருங்கள்.

News August 18, 2025

கேஜிஃஎப் நாயகனுடன் கைகோர்க்கும் இளம் நாயகி..!

image

தென்னிந்திய சினிமாவின் லேட்டஸ்ட் சென்சேஷன் நடிகை ருக்மணி வசந்த். VJS-ன் ஏஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் SK-வுடன் மதராஸி, ரிஷப்பின் காந்தாரா, ஜூனியர் NTR-ன் புதிய படம் என பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், யஷ்ஷின் டாக்ஸிக் படத்திலும் இவர் இணைந்திருக்கிறார். தென்னிந்திய அளவில் அடுத்த தலைமுறை நடிகைகளில் இவர்தான் டாப் என்கிறார்கள்.

error: Content is protected !!