News August 18, 2025
பாக்கெட்டில் போன் வைப்பவரா? எச்சரிக்கை!

நீண்டநேரம் பாக்கெட்டில் மொபைல் வைத்திருப்பது, மடி மீது வைத்து லேப்டாப் பயன்படுத்துவது ஆகியவற்றால் குழந்தையின்மை மற்றும் ஆண்மைக்குறைவு ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. கொல்கத்தா பல்கலை., IRM நிறுவனங்கள் இணைந்து, 1200 ஆண்களிடம் 5 yrs நடத்திய ஆய்வில் இது உறுதியாகியுள்ளது. இந்த சாதனங்களில் இருந்து வெளியாகும் மின்காந்த கதிர்வீச்சும் வெப்பமும் விந்தணு உருவாக்க செல்களை பாதிப்பதால் இந்நிலை ஏற்படுகிறது.
Similar News
News December 15, 2025
தமிழகத்தில் பொங்கலை கொண்டாட உள்ளாரா PM மோடி

ஜனவரி 13 முதல் 15-ம் தேதி வரை 3 நாள்களுக்கு தமிழகத்தில் PM மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள அவர், ஜன.14-ம் தேதி விவசாயிகளுடன் பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ உள்ளாராம். தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து PM மோடி பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
News December 15, 2025
குளிர்கால ஆரோக்கியத்துக்கு இது முக்கியம் மக்களே!

வெயில் காலத்தை விட குளிர்காலத்தில் நாம் நோய் தொற்றால் அதிகம் பாதிக்கப்படுவது வழக்கம். இதனால் ஆரஞ்சு, நெல்லிக்காய், திராட்சை உள்ளிட்ட வைட்டமின் C நிறைந்த உணவுகளை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். குளிர்காலத்தில் நீராவி குளியல் எடுப்பது, வியர்வையை வெளியேற்றவும், தசைகளை தளர செய்யவும் உதவுமாம். அடிக்கடி நோய் பாதிப்பு ஏற்படும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News December 15, 2025
என்ஜின் இல்லாத கார் அதிமுக: DCM உதயநிதி ஸ்டாலின்

பழைய அடிமைகளுடன் புதிய அடிமைகளை சேர்த்துக்கொண்டு தமிழ்நாட்டிற்கு நுழைய பாஜக முயல்கிறதாக உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார். தி.மலை இளைஞரணி மாநாட்டில் பேசிய அவர், என்ஜின் இல்லாத காரான அதிமுகவை, பாஜக என்னும் லாரி கட்டி இழுக்கிறதாகவும் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என பேசும் EPS, முதலில் அதிமுகவை காப்பாற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


