News August 18, 2025
வீட்டிலிருந்தே இலவச மருத்துவ ஆலோசனை பெற வேண்டுமா?

சாமானிய மக்கள் இருக்கும் இடத்திலிருந்தே இலவசமாக மருத்துவ ஆலோசனை பெறும் வசதி இந்தியாவில் உள்ளது ▶இதற்கு e-Sanjeevani செயலியைப் பதிவிறக்கவும். ▶செயலிக்குள் Patient Registration-ஐ கிளிக் செய்து, உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் OTP-ஐ உள்ளிடுங்கள் ▶பிறகு பெயர், பிறந்த தேதி & முகவரியை வழங்கினால் SMS மூலம் Patient ID கிடைக்கும் ▶LogIn செய்து, வீடியோ காலில் மருத்துவர் இணையும் வரை காத்திருங்கள்.
Similar News
News December 10, 2025
காங்., அமமுக விருப்ப மனுக்கள் விநியோகம்

2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்நிலையில், அமமுக & காங்., கட்சிகள், இன்று முதல் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனர். அமமுகவில் தமிழகத்தில் போட்டியிட ₹10,000, புதுச்சேரிக்கு ₹5,000 செலுத்தி விருப்ப மனுவை பெறலாம். காங்.,கில் கட்டணமின்றி விருப்ப மனுக்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விருப்பமுடையவர்கள் மனுக்களை வாங்கி வருகின்றனர்.
News December 10, 2025
எந்த ஷா வந்தாலும் முடியாது: மு.க.ஸ்டாலின் சவால்

தேனாம்பேட்டையில் நடந்த ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ பரப்புரை நிகழ்ச்சியில் ஸ்டாலின் பங்கேற்றார். இதுதொடர்பான புகைப்படங்களை X பக்கத்தில் வெளியிட்ட அவர், ‘எந்த ஷா வந்தாலென்ன, எத்தனை திட்டம் போட்டாலென்ன. டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்கு தக்க பாடம் புகட்டும்’ என்று சூளுரைத்துள்ளார்.
News December 10, 2025
ODI கிரிக்கெட்டின் உச்சத்தை நெருங்கும் கோலி!

ODI பேட்டரிகளின் தரவரிசையில் கிங் கோலி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். SA-வுக்கு எதிரான தொடரில், 2 சதங்களும், ஒரு அரைசதமும் விளாசிய அவர் தொடர்நாயகன் விருதையும் வென்றிருந்தார். தரவரிசையில் அவர் 773 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்க, முதல் இடத்தில் ரோஹித் சர்மா(781 புள்ளிகள்) உள்ளார். ரோஹித்தும், கோலியும் ODI-யின் உச்சம் தொட்டுள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.


