News March 23, 2024
ஹைதராபாத் அணிக்கு 209 ரன்கள் இலக்கு

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 208/7 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் 54 ரன்கள் அடித்தார். அதன்பின் வந்தவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் கடைசியில் களமிறங்கி அதிரடியாக ஆடிய ரமன்தீப் 35, ரிங்கு சிங் 23, ரசல் 64* ரன்கள் விளாசினர். SRH தரப்பில் நடராஜன் 3, மயங்க் மார்கண்டே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Similar News
News April 29, 2025
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக கவாய்-ஐ நியமனம் செய்து குடியரசுத் தலைவர் முர்மு உத்தரவிட்டுள்ளார். தற்போது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா மே 13 அன்றுடன் ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து, புதிதாக நியமிக்கப்பட்ட பி.ஆர். கவாய் மே 14-ம் தேதி தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொள்கிறார். அடுத்த ஆறு மாதங்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக இருக்கப்போகும் அவர், நவ., மாதம் ஓய்வு பெறுவார் என தெரிகிறது.
News April 29, 2025
தாயை கொலை செய்த வழக்கில் தஷ்வந்த் விடுதலை

2018-ல் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் குற்றவாளியான தஷ்வந்த், ஜாமினில் வெளியே வந்து தாயை கொலை செய்ததாக கைதானார். தமிழகத்தையே உலுக்கிய இவ்வழக்கில் தஷ்வந்த் தந்தை பிறழ்சாட்சியாக மாறியதால் அவரை விடுதலை செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னதாக, சிறுமி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனைக்கு SC இடைக்கால தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
News April 29, 2025
ட்ரம்ப் எதிர்ப்பால் வென்ற மார்க் கார்னி

கனடா பொதுத் தேர்தலில் மார்க் கார்னி வெற்றி பெற்றதற்கு, அவருடைய தீவிர ட்ரம்ப் எதிர்ப்பே முக்கிய காரணம் என கூறப்படுகிறது. ட்ரம்ப் அமெரிக்க அதிபரான பிறகு, கனடாவை USA-வின் மாகாணம் என்றும் அன்றைய PM ட்ரூடோவை கவர்னர் என்றும் அழைத்தார். ட்ரம்ப்பின் இந்த பெரியண்ணன் மனப்பான்மையை பெரும்பாலான கனடியர்கள் விரும்பவில்லை என்பது தேர்தல் முடிவில் வெளிப்பட்டுள்ளது. தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வாரா ட்ரம்ப்?