News March 23, 2024
ஹைதராபாத் அணிக்கு 209 ரன்கள் இலக்கு

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 208/7 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் 54 ரன்கள் அடித்தார். அதன்பின் வந்தவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் கடைசியில் களமிறங்கி அதிரடியாக ஆடிய ரமன்தீப் 35, ரிங்கு சிங் 23, ரசல் 64* ரன்கள் விளாசினர். SRH தரப்பில் நடராஜன் 3, மயங்க் மார்கண்டே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Similar News
News November 9, 2025
தேர்தல் கூட்டணி.. விஜய் கட்சியில் மாற்றம்

விஜய்யின் கூட்டணி முடிவால் தவெக 2-ம் கட்ட நிர்வாகிகள் அப்செட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. கரூர் துயருக்கு பிறகு கூட்டணி என அவர்கள் விரும்பியதாகவும், ஆனால் மூத்த நிர்வாகிகள் விஜய்யின் மனதை மாற்றிவிட்டதாகவும் பேசப்படுகிறது. தனித்து நின்றால் DMK-வுக்கு அது சாதகமாகும் என கருதி, தேர்தல் சீட் கேட்க கூட தயங்குகின்றனராம். கூட்டணி பற்றிய அவர்களது மனமாற்றத்தால் தவெக தலைமை குழப்பத்தில் உள்ளதாம்.
News November 9, 2025
அதிமுகவை எந்த கொம்பனும் அசைக்க முடியாது: EPS

அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என EPS பேசியுள்ளார். காற்றை எப்படி தடை போட முடியாதோ, அது போல தான் அதிமுகவை தடுத்து நிறுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். கூடவே இருந்த பல எட்டப்பர்களின், வீழ்த்தும் முயற்சிகளை எல்லாம் முறியடித்து அதிமுக தலைநிமிர்ந்து நிற்பதாக EPS தெரிவித்தார். மேலும், இந்தியாவில் எந்த கட்சியும் அதிமுகவை போல கடும் சோதனைகளை சந்திக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
News November 9, 2025
நிலவு ஆராய்ச்சியில் இந்தியா புதிய மைல்கல்

2019-ல் நிலவை ஆராய்ச்சி செய்திட ஏவப்பட்ட சந்திராயன்-2, இன்றளவிலும் அதன் பணியை சிறப்பாக செய்கிறது. அகமதாபாத்தில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திராயன்-2 அனுப்பும் தகவல்களை ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இதுவரை 1,400 ரேடார் தரவுத்தொகுப்புகள் சேகரிக்கப்பட்ட நிலையில், முதல் முறையாக நிலவில் L பேண்ட் ரேடார் மேப்-கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதை வைத்து நிலவில் தண்ணீர், ஐஸ்-ன் தடங்களை கண்டறிய வாய்ப்புள்ளது.


