India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ரஜினியின் ‘ஜெயிலர்’ வெற்றி பெற்றதில், வில்லனாக (வர்மன்) நடித்திருந்த விநாயகனுக்கும் முக்கிய பங்குண்டு. முதல் பாகத்தில் இவர் இறப்பது போன்ற காட்சிகள் இருந்தாலும், ஜெயிலர் 2-விலும் வர்மன் கதாபாத்திரம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அவரே ஒரு நேர்காணலில் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் படக்குழு விதித்துள்ள கட்டுப்பாட்டால், அதைப்பற்றி முழுமையாக சொல்ல முடியாது என்றும், அவர் கூறியுள்ளார்.

*பலவீனமானவர்களால் ஒருபோதும் மன்னிக்க முடியாது. மன்னித்தல் என்பது வலிமையானவர்களின் பண்பாகும். *எப்படி சிந்திக்க வேண்டும் என்று தெரிந்தவர்களுக்கு ஆசிரியர் தேவை இல்லை. நாளைக்காக சிந்தியுங்கள் ஆனால் இன்றைக்காக செயல்படுங்கள். *மனித குலத்தின் மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் அமைதி. *கோபம் அஹிம்சையின் எதிரி. அகங்காரம் அதை விழுங்கும் ஒரு அரக்கன் எங்கே அன்பு இருக்கிறதோ அங்கே வாழ்க்கை இருக்கிறது.

புதுச்சேரியில், செய்தியாளர் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக சீமான் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பாக, ஏற்கெனவே நாதகவின் நிர்வாகிகள் சுந்தரபாண்டி, செல்வம் ஆகியோர் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். இந்நிலையில், டிச.8-ம் தேதி நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு சீமானுக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளனர்.

டிச.24-ம் தேதி தொடங்கும் விஜய் ஹசாரே (VHT) தொடரில் டெல்லி அணிக்காக கோலி விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வடிவிலான கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடும் கோலி, 2027 WC வரை தனது ஃபார்மை மெயின்டெயின் செய்வதில் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளார். விஜய் ஹசாரே மட்டுமின்றி BCCI நடத்தும் உள்ளூர் போட்டிகளில் விளையாட கோலி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடைசியாக 2010-ல் கோலி VHT-ல் ஆடியிருந்தார்.

இந்தியாவில் 811 பேருக்கு ஒரு டாக்டர் மட்டுமே இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதை சமாளிக்க மருத்துவக் கல்வி இடங்களை அதிகரிப்பது, சுகாதார திட்டங்களை செயல்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 2014-ல் 387 ஆக இருந்த மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை 818 ஆகவும், UG இடங்கள் 1,28,875 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை
▶குறள் எண்: 538
▶குறள்:
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.
▶பொருள்: உயர்ந்தோர் புகழ்ந்து சொன்னவற்றை விரும்பிக் கடைப்பிடிக்க வேண்டும். கடைப்பிடிக்க மறந்தவர்க்கு ஏழு பிறப்பிலும் நன்மை இல்லை.

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றக்கூடாது என முறையிட்டு தனது இந்து மதவெறுப்பை திமுக அரசு மீண்டுமொருமுறை வெளிப்படுத்தியுள்ளதாக நயினார் சாடியுள்ளார். மதச்சார்பின்மை வேடமிட்டு இந்து மதத்தை குறிவைத்துத் தாக்கும் திமுக அரசின் மேல்முறையீட்டு முறியடிக்கப்படும் என்றும், அவர் கூறியுள்ளார். மக்களின் மதநம்பிக்கையை புண்படுத்தும் திமுக அரசு தூக்கியெறிப்படும் எனவும் அவர் X-ல் பதிவிட்டுள்ளார்.

நீண்ட நாள்களுக்கு பிறகு தியேட்டர்களில் அஜித், விஜய் படங்கள் மோதுகின்றன. சில நாள்களுக்கு முன்பு ரீ-ரிலீசான அஜித்தின் அட்டகாசத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், தியேட்டர்களில் கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்படுகின்றன. இந்நிலையில், விஜய்யின் காவலன் டிச.5-ம் தேதி ரீ-ரிலீசாகிறது. இதையடுத்து இரு நட்சத்திரங்களின் ரசிகர்களும், பாக்ஸ் ஆபிஸில் தங்களது பலத்தை காட்ட ஆவலோடு உள்ளனர். ஹிட் அடிக்க போவது யார்?

▶டிசம்பர் 3, கார்த்திகை 17 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10.45 AM – 11:45 AM & 6.30 PM – 7.30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்

கேரளாவில் தியேட்டரில் காதல் ஜோடிகள் ரொமான்ஸ் செய்த வீடியோக்கள் டெலிகிராம், X தளத்தில் வைரலாகி வருகிறது. அரசு நடத்தும் தியேட்டர்களின் CCTV காட்சிகள் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு குறைபாடு காரணமாக இதனை எளிதில் ஹேக் செய்துவிடுவதாக நிபுணர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அதேநேரத்தில், தியேட்டரில் காதல் ஜோடிகள் அத்துமீறுவது சரியல்ல என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.