News April 22, 2025
ஒரு வேலையும் செய்யாத நிறுவனத்திற்கு ₹1,000 கோடி!

தொடங்கி 2 மாதங்களே ஆன, எந்தவித செயல்பாடுகளும் இல்லாத URSA Clusters என்ற நிறுவனத்திற்கு, ஆந்திர அரசு ₹1,000 கோடி மதிப்புள்ள 59.6 ஏக்கர் நிலத்தை சொற்பமான தொகைக்கு ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த அந்த நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ₹10 லட்சமாக இருக்கிறது. ஆனால், ₹5,728 கோடி முதலீடு செய்யும் என ஆந்திர அரசு எப்படி கூறுகிறது என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
Similar News
News April 23, 2025
அப்பளம் அதிகம் சாப்பிட்டால் ஆபத்து!

வீட்டின் மாடியில் அரிசி வத்தல், ஜவ்வரிசி வத்தல் காயப்போடுவது வழக்கொழிந்துவிட்டது. அதற்கு மாற்றாக ரெடிமேட் அப்பளங்களே இப்போது வீட்டில் அதிகம் பொரிக்கப்படுகின்றன. இதனை அதிகம் உணவில் சேர்ப்பது ஆபத்து என்கின்றனர் டாக்டர்கள். காரணம் இதில் இருக்கும் சோடியம் பென்சோயேட். இது உயர் ரத்த அழுத்தம், இருதய நோய் வருவதற்கு வழிவகுக்குமாம். சோ, ரெடிமேட் அப்பளங்களை அளவாக பயன்படுத்துங்கள்.
News April 23, 2025
காஷ்மீர் தாக்குதல்: மோடியிடம் போனில் பேசிய ட்ரம்ப்

பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தொலைபேசியில் PM மோடியை தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது, கொடூரமான தாக்குதலுக்கு காரணமானவர்களை நீதியின் முன்நிறுத்த முழு ஆதரவு அளிப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் அமெரிக்கா துணை நிற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
News April 23, 2025
அட்ஜஸ்ட்மெண்ட்: நடிகைகளுக்குள் கருத்து மோதல்

பாலியல் அத்துமீறல் குறித்து மலையாள நடிகை மாலா பார்வதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல பெண்கள் சின்ன விஷயத்தை கூட பெரிதாக்குவதாகவும், அத்துமீறும் தொனியில் பேசுவர்களை கடந்து செல்லுங்கள் என்றும் அவர் கூறி இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகை ரஞ்சனி, இதுபோன்ற விஷயங்களை எப்படி ஆதரிக்கிறீர்கள் என வினவினார். இந்த கருத்து உங்கள் குணத்தை காட்டுகிறது என்றும் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.