News September 16, 2024
சட்டம் அறிவோம்: BNS பிரிவு 296 என்ன சொல்கிறது?

பொது இடத்தில் ஏதேனும் ஆபாசமானச் செயலைப் புரிந்தாலோ அல்லது ஏதேனும் ஆபாசமான பாடலைப் பாடினாலோ, ஆபாசமான வார்த்தைகளை சொன்னாலோ அல்லது வாசகத்தை உச்சரித்தாலோ BNS சட்டப் பிரிவு 296இன் படி குற்றமாகும். இத்தகைய குற்றச்செயலில் ஈடுபடுபவர்களுக்கு 3 மாதம் வரை நீட்டிக்கப்படக் கூடிய சிறைத்தண்டனை அல்லது ₹1,000 வரை அபராதம் விதிக்கப்படும் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
Similar News
News April 25, 2025
TN-ல் 200 பாகிஸ்தானியர்கள்.. தீவிரமடையும் வெளியேற்றம்

குடியுரிமை அதிகாரிகள் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 200 பாகிஸ்தானியர்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 200 பேரில் பெரும்பாலானவர்கள் சென்னையில் தான் உள்ளனர். தொழில், மருத்துவ சிகிச்சைக்காக வந்தவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் தமிழக காவல்துறை ஈடுபட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற மத்திய அரசு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
News April 25, 2025
தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம்?

தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சர்ச்சை பேச்சால் பொன்முடிக்கும், நீதிமன்ற கெடுவால் செந்தில் பாலாஜிக்கும் நெருக்கடி நிலவுவதால், அவர்கள் அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்கப்படலாம் எனவும், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு மின்சாரத்துறை வழங்கப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் சில மூத்த அமைச்சர்களும் மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
News April 25, 2025
தீவிரவாதம் – பயங்கரவாதம் என்ன வித்தியாசம்?

ஒரு கொள்கையின் அடிப்படையில் சமூக மற்றும் அரசியல் குறிக்கோள்களுடன் வன்முறையில் ஈடுபடுபவர்களை தீவிரவாதிகள் என்பர். ஒரு நாட்டின் இறையாண்மை, பொருளாதாரத்தை கெடுக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களை பயங்கரவாதிகள் என்பர். அதோடு அப்பாவி மக்களின் உயிர், உடைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிந்தே அவர்கள் செயல்படுவார்கள். இரண்டும் வன்முறை செயல்களே என்ற போதிலும், நோக்கத்தில் வித்தியாசங்கள் உள்ளன.