News April 25, 2025
TN-ல் 200 பாகிஸ்தானியர்கள்.. தீவிரமடையும் வெளியேற்றம்

குடியுரிமை அதிகாரிகள் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 200 பாகிஸ்தானியர்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 200 பேரில் பெரும்பாலானவர்கள் சென்னையில் தான் உள்ளனர். தொழில், மருத்துவ சிகிச்சைக்காக வந்தவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் தமிழக காவல்துறை ஈடுபட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற மத்திய அரசு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 8, 2025
ராசி பலன்கள் (08.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News November 8, 2025
VIRAL PHOTO: காதலை உறுதிப்படுத்திய சமந்தா

சமந்தாவும் இயக்குநர் ராஜ் நிதிமோரும் காதலித்து வருவதாக நீண்ட நாள்களாக ஒரு வதந்தி வலம் வருகிறது. ஆனால் இதுவரை இருவரும் அது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் தனது புதிய perfume brand அறிமுக நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமந்தா பகிர்ந்துள்ளார். ராஜை கட்டியணைத்தபடி உள்ள அந்த போட்டோ வைரலான நிலையில், காதலை சமந்தா உறுதிப்படுத்திவிட்டதாக பார்க்கப்படுகிறது.
News November 7, 2025
கோவையில் பெண் கடத்தல் விவகாரத்தில் புது ட்விஸ்ட்

கோவையில் பெண் கடத்தப்பட்டதாக வெளியான சிசிடிவி காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், தான் கடத்தப்படவில்லை என்று அந்த பெண் கொடுத்த விளக்கத்தை, போலீஸ் வீடியோவாக பகிர்ந்துள்ளது. அதில் தனது கணவருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதனால் கோபித்துக்கொண்டு சென்றபோது அவர் கையை பிடித்து காரில் ஏற்றியதாகவும் கூறியுள்ளார். காரில் அவர் தன்னை அடித்ததாகவும், பதிலுக்கு தானும் அடித்தேன் என்றும் விளக்கமளித்துள்ளார்.


