News August 22, 2024
ஆன்லைன் டிக்கெட் விற்பனை சந்தையில் Zomato

உணவு டெலிவரி நிறுவனமான Zomato, Paytmஇன் திரைப்படம், விளையாட்டு உள்ளிட்ட டிக்கெட் விற்பனைக்கான டிக்கெட் தளத்தை ₹2,048 கோடிக்கு கையகப்படுத்த விண்ணப்பித்துள்ளது. இந்த ஒப்பந்தம் இறுதியாக ஓராண்டு ஆகலாம் எனக் கூறப்படுகிறது. அதுவரை இந்த சேவையை Paytm தொடரும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. TicketNew, Insider ஆகிய நிறுவனங்களை சில ஆண்டுகளுக்கு முன் Paytm வாங்கி இருந்தது.
Similar News
News August 16, 2025
ஆஸி., கிரிக்கெட் ஜாம்பவான் காலமானார்

ஆஸி., அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டனும், முதல் முழுநேர பயிற்சியாளருமான பாப் சிம்ப்சன் (89) காலமானார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் கேப்டனாக பணியாற்றிய அவர், ஆஸி.,யின் தலைசிறந்த ஓபனர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். சிறந்த ஸ்லிப் ஃபீல்டர்களில் ஒருவராக இருந்த அவர், முதல் தர கிரிக்கெட்டில் 21,029 ரன்கள் குவித்ததுடன் தனது லெக் ஸ்பின் மூலம் 349 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.
News August 16, 2025
ராமதாஸ் வழிகாட்டி மட்டுமே: கே.பாலு

பொதுக்குழுவை கூட்ட அன்புமணிக்கு உரிமை இல்லை என ராமதாஸ் கூறியிருந்தார். ஆனால், கட்சியின் 34 விதிகளிலும் அப்படியான எதுவும் இல்லை என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கே.பாலு தெரிவித்துள்ளார். அத்துடன், கட்சியின் நிறுவனர் வழிகாட்டி மட்டுமே, அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் பாலு அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார். இதனிடையே, ராமதாஸின் மனைவி சரஸ்வதி பிறந்தநாளில் தந்தை-மகன் சந்தித்துள்ளனர்.
News August 16, 2025
இன்று National Work From Home Wellness Day!

வீட்டில் உட்கார்ந்தபடியே வேலை செய்வதால் வரும் பாதிப்புகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் தினம் இன்று. வீட்டிலிருந்து வேலை செய்வது சுகம்தான் என்றாலும், நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பதால், உடலும் மனமும் சோர்ந்து போகும். ஆகவே, வேலையின் இடையே சிறிது நேரம் நடைபயிற்சி செய்யுங்கள், நன்றாக தண்ணீர் குடியுங்கள், வீட்டில் உள்ளவர்களிடம் சிரித்து பேசுங்கள். உங்களுக்கு Work From home பிடிக்குமா?