News April 4, 2024
ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிகள்

ஆன்மாவின் கிரகமாக கருதப்படும் சூரிய பகவான் தற்போது மீன ராசியில் நுழைகிறார். ஏற்கெனவே அங்கு புதன், ராகு உள்ளதால் சூரியனின் சஞ்சாரம் சில ராசிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தப் போகிறது. அந்த வகையில் கடகம், துலாம், தனுசு, மகர ராசியினர் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க உள்ளனர். கொடுக்கல் வாங்கலில் தகராறு, பண முடக்கம், தொழிலில் சுணக்கம், பண வரவு இல்லாதது என பல்வேறு சிக்கல்களை இந்த ராசியினர் அனுபவிக்க உள்ளனர்.
Similar News
News January 1, 2026
பொங்கல் பரிசு… அரசு மகிழ்ச்சியான அறிவிப்பு

பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்க TN அரசு திட்டமிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புக்காக ₹248 கோடி ஒதுக்கியுள்ள அரசு, 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை, ஒரு கரும்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதையடுத்து, ஒரு சில நாள்களில் ₹3,000 ரொக்கப் பணம் குறித்த அறிவிப்பையும் CM ஸ்டாலின் வெளியிடுவார் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News January 1, 2026
ஆபரேஷன் சிந்தூர்.. இந்தியா பெருமிதம்

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஆபரேஷன் சிந்தூர் ஒரு சிறந்த சான்று என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில், இந்திய படைகள் திறம்பட செயல்பட்டு PAK-ன் தீவிரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்ற செய்தியை உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் சொல்லியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
News January 1, 2026
புத்தாண்டு ஸ்பெஷல் கோலங்கள்!

வருடத்தின் முதல் நாளான இன்று வீட்டுவாசலில் கோலமிடுவது சிறப்புக்குரிய விஷயமாகும். புத்தாண்டை வரவேற்று கோலமிடுவதால் ஆண்டு முழுவதுமே வீட்டில் மகிழ்ச்சி ததும்பும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில், வீட்டுவாசலில் போடக்கூடிய சில வண்ணமயமான புத்தாண்டு கோலங்கள் போட்டோக்களாக பகிரப்பட்டுள்ளன. அவற்றை Swipe செய்து பார்த்து வீட்டில் தவறாமல் முயற்சிக்கவும்.


