News January 24, 2025

நாளை சென்னை மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம்!

image

சென்னையில் நாளை இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் T20 போட்டி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு போட்டிக்கான டிக்கெட் வைத்திருப்பவர்கள், மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. எந்த மெட்ரோ ஸ்டேஷனில் இருந்தும் அரசினர் தோட்டம் மெட்ரோ ஸ்டேஷனுக்கு சுற்றுப்பயணம் (2 Entry, 2 Exit) மேற்கொள்ளலாம். அதே போல, ரயில் சேவை நேரமும் இரவு 12:00 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 3, 2025

புதுக்கோட்டை: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அரியலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்!

News December 3, 2025

நாமக்கல்: 3 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு!

image

நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 3 நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 20 மி.மீட்டரும், நாளை (வியாழக்கிழமை) 30 மி.மீட்டரும், நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) 16 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 82.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 73.4 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News December 3, 2025

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹160 உயர்வு

image

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ₹240 குறைந்திருந்த நிலையில், இன்று(டிச.3) சவரனுக்கு ₹160 உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹20 உயர்ந்து ₹12,060-க்கும், சவரன் ₹96,480-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1 அவுன்ஸ்(28g) 20.79 டாலர்கள் குறைந்து 4,220 டாலர்களாக விற்பனையாகிறது. ஆனாலும், இந்திய சந்தையில் தங்கம் விலை இன்று உயர்வைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!