News March 18, 2024
காலையில் டீ, காபிக்கு பதில் இதை அருந்தலாம்

காலையில் டீ, காபிக்கு பதிலாக மோரில் இஞ்சி, கருமிளகு, சீரகம் போன்றவற்றை சேர்த்து அருந்தலாம். ஒரு கிளாஸ் மோர் அருந்துவது சூட்டை தணித்து உடலை வறண்ட நிலையில் இருந்து பாதுகாக்கிறது. வெண்ணெய் நீக்கப்பட்ட தயிரில் மோர் தயாரிப்பது நல்லது. மோர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வாயுப்பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.
Similar News
News February 16, 2026
தவெகவில் இணைந்த மேலும் ஒரு அதிமுக Ex MLA

தவெகவில் செங்கோட்டையன் இணைந்த பின் பல அதிமுக Ex MLA-க்கள் தவெகவில் இணைந்து வருவது EPS-க்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. அந்த வரிசையில் வாசுதேவநல்லூர் அதிமுக Ex MLA மனோகரன் விஜய் முன்னிலையில் நேற்று தவெகவில் இணைந்தார். அவருக்கு சால்வை அணிவித்து விஜய் கட்சியில் இணைத்துக் கொண்டார். வரும் நாள்களில் இன்னும் சில அதிமுக முன்னாள் நிர்வாகிகள் தவெக பக்கம் சாய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
News February 16, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஆள்வினையுடைமை ▶குறள் எண்: 611 ▶குறள்:
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
▶பொருள்: நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.
News February 16, 2026
அஜித்துடன் மீண்டும் இணைகிறாரா சிறுத்தை சிவா?

அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் உள்ளிட்ட 4 படங்களை கொடுத்தவர் இயக்குநர் சிறுத்தை சிவா. சமீபத்தில் அஜித்துடன் இணைந்து விளம்பர படம் ஒன்றையும் அவர் எடுத்தார். இதனால் இருவரும் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக செய்திகள் வந்த நிலையில், அனைத்தும் சரியாக அமையும்போது அதற்கான அறிவிப்பு வரும் என சிவா கூறியுள்ளார். மேலும், படத்தின் Genre ரகசியமாகவே வைத்திருக்கிறோம் எனவும் கூறியுள்ளார்.


