News August 8, 2025
Whatsapp-ல் ஈசியா திருப்பதி தரிசன டிக்கெட் வாங்கலாம்!

Whatsapp-ல் ஈசியாக திருப்பதி தரிசன டிக்கெட் பெற,
*ஆந்திர அரசின் ‘9552300009’ என்ற நம்பருக்கு ‘HI’ என மெசேஜ் பண்ணுங்க.
*பிறகு, EN என மெசெஜ் செய்து, Service பற்றிய தகவல் ஆங்கிலத்தில் வரும்.
*அதில், TTD temple services-ஐ தேர்வு செய்யவும்.
*டிக்கெட் இருப்பை சரிபார்த்து, தேவையான டிக்கெட், நேரம் ஆகியவற்றை உங்களின் அரசு ID-யுடன் உள்ளிட்டால், டிக்கெட் Whatsapp-லேயே கிடைத்து விடும்.
Similar News
News August 8, 2025
சென்னை ஐகோர்ட் நீதிபதியின் விநோத அழைப்பு!

ராமதாஸ், அன்புமணி <<17340719>>இருவரிடம் தனியாக பேச வேண்டும்<<>> என ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பு விடுத்துள்ளது விநோதமானது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது குடும்பப் பிரச்னை அல்ல; கட்சியின் சட்ட விதிகளுக்கு உட்பட்டது எனக் கூறும் சட்ட வல்லுநர்கள், வழக்கை விசாரிப்பதற்கு முன்பு வேண்டுகோளாக விடுத்துள்ளதால் இதனை ஏற்பது ராமதாஸ் மற்றும் அன்புமணியின் தனிப்பட்ட விருப்பம் எனக் கூறியுள்ளனர்.
News August 8, 2025
உலகம் முழுவதும் பரவிய ‘முழுமுதற் கடவுள் விநாயகர்’

விநாயகரை இந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு பெயர்களில், மக்கள் வழிபடுகின்றனர். இவற்றில் உருவமும், வழிபடும் மொழியும் மட்டுமே கொஞ்சம் மாறுபடுகிறது. ஆனால், அனைத்து இடங்களிலும் இவர் தான் முதற்கடவுள். அப்படி உலகத்தில் பல்வேறு நாடுகளில் விநாயகர் வழிபடுவதை அடுத்தடுத்த போட்டோக்களில் கொடுத்துள்ளோம். இவற்றில் எது உங்களை ஆச்சரியப்படுத்தியது.
News August 8, 2025
இந்திய இறக்குமதியை நிறுத்திய US நிறுவனங்கள்?

டிரம்பின் 50% வரி விதிப்பால் வால்மார்ட், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்திய இறக்குமதியை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆடைகள் ஏற்றுமதியை நிறுத்தி வைக்குமாறு இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு அந்நிறுவனங்கள் கடிதம் எழுதியுள்ளதாம். இந்தியாவிலிருந்து அதிக விலைக் கொடுத்து வாங்க அவர்கள் விரும்பவில்லை. இதனால் இந்தியா ஜவுளி ஏற்றுமதியில் தனது ஆர்டர்களை மற்றவர்களிடம் இழக்கும் நிலை உள்ளது.