News August 7, 2024
இந்திய அணி தடுமாற்றம்

இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறி வருகிறது. கொழும்புவில் நடைபெறும் போட்டியில், முதலில் விளையாடிய SL, 248/7 ரன்கள் எடுத்தது. 249 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய IND அணி, 12.5 ஓவர்களில் 82 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ரோஹித் 35, கில் 6, பண்ட் 6, கோலி 20, அக்ஷர் 2, ஸ்ரேயாஸ் 8 ரன்களில் அவுட்டாகினர். பராக், துபே களத்தில் உள்ளனர்.
Similar News
News July 11, 2025
4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும்: IMD

TN-ல் இன்று 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 102°F, குறைந்தபட்ச வெப்பநிலை 84 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும் என அறிவித்துள்ளது. இதனால், நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்லும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், குடை, தண்ணீர் பாட்டில் உடன் எடுத்துச் செல்வது நல்லது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News July 11, 2025
வீட்டில் சாமி கும்பிடும் போது… இந்த 3 விஷயங்கள் அவசியம்!

வீட்டில் பூஜை செய்ய ஏதோ ஒரு தடங்கல் ஏற்படுகிறது என்றால், அது கர்மவினையே காரணம் என்கின்றனர். அதிலிருந்து விடுபட்டு, கடவுளை முழு மனதுடன் பூஜிக்க இந்த திரிகரண சுத்தி உங்களுக்கு உதவும். வீட்டில் கடவுளை வழிபடும் போது, கைகளால் புஷ்பங்களை தூவி, வாய் முழுக்க கடவுளின் மந்திரங்களை பாட, தூய எண்ணங்களோடு வழிபட வேண்டும். இடையூறுகள் இருப்பினும் மனதை ஒருநிலைப்படுத்தி கடவுளை வழிபடுங்கள். SHARE IT.
News July 11, 2025
என்ன பயணம் போனாலும் இலக்கை அடைய மாட்டார்

இபிஎஸ், பாஜகவின் ஒரிஜினல் வாய்ஸாக மாறிவிட்டார் என CM ஸ்டாலின் சாடியுள்ளார். திருவாரூரில் பேசிய அவர், கூவத்தூரில் ஏலம் எடுத்து, கரப்ஷன், கலெக்ஷன், கமிஷன் என தமிழகமே பார்க்காத அவல ஆட்சியை நடத்தியதாகக் கடுமையாக விளாசினார். தமிழ்நாடு என சொல்லக்கூடாது என்று கூறும் கூட்டத்துடன் சேர்த்த அவர், எந்தப் பயணம் போனாலும் இறுதியில் இலக்கை அடைய மாட்டார் என விமர்சித்தார்.