News March 17, 2024
WPL : இன்று இறுதிப் போட்டி

WPL இல் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் முதல் முறையாக கோப்பையை கைப்பற்றும் ஆர்வத்தில் விளையாட உள்ளன. ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு வருவது இதுவே முதல் முறை. டெல்லி அணிக்கு இது இரண்டாவது முறை. எந்த அணி கோப்பையை வெல்லும்.
Similar News
News December 8, 2025
₹500 கோடி கொடுத்தால் CM தான் ஆக முடியுமா?

₹500 கோடி கொடுத்தால் பஞ்சாப் CM ஆக முடியும் என அம்மாநில காங்., தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சித்து கூறியுள்ளது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. யாரும் உங்களிடம் பணம் கேட்கமாட்டார்கள். ஆனால், பணம் கொடுப்பவர்கள் தான் CM வேட்பாளராக அறிவிக்கப்படுவர். தனது கணவரை CM வேட்பாளராக அறிவிக்கவில்லை என்றால், அவர் அரசியலில் கவனம் செலுத்தமாட்டார் என்றும் கவுர் தெரிவித்துள்ளார்.
News December 8, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 8, கார்த்திகை 22 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:15 AM – 7:15 AM & 1.45 PM – 2.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 9.15 AM – 10:15 AM & 7.30 PM – 8.30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்
News December 8, 2025
சனாதன தர்மம் மூடநம்பிக்கை அல்ல அறிவியல்: PK

தமிழகத்தில் இந்துக்கள் மத சம்பிரதாயங்களை பின்பற்ற கூட சட்ட போராட்டம் நடத்த வேண்டியிருப்பதாக <<18482516>>பவன் கல்யாண்<<>> தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் இந்துக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். சனாதன தர்மம் என்பது மூடநம்பிக்கை இல்லை, ஆன்மிக அறிவியல். அதேபோல், பகவத் கீதை என்பது பிராந்திய, மத நோக்கம் இல்லாதது. ஒவ்வொரு இளைஞரும் அதை படிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


