News October 20, 2025
நாளை மறந்தும் கூட இதை செய்து விடாதீர்கள்

தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகளை வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாளை காலை 6 – 7 மணி, இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடங்களில் வெடிக்கக்கூடாது. பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து விளையாடக்கூடாது. குடிசைகளின் பக்கத்திலோ, ஓலைக் கூரைகள் உள்ள இடங்களிலோ பட்டாசு வெடிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News December 16, 2025
₹21 டூ ₹1,00,000 வரை தங்கத்தின் விலை கடந்து வந்த பாதை!

ஏழைகளுக்கு மட்டுமில்லை, நடுத்தர வர்க்கத்தினருக்கும் எட்டாக் கனியாக மாறிவிட்டது தங்கம். ஒரு காலத்தில் ₹21-க்கு விற்கப்பட்ட இந்த தங்கம், இன்று ₹1,00,000 கடந்துவிட்டது. தங்கத்தின் விலை கடந்து வந்த பாதையை மேலே கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். நீங்க கடைசியா வாங்குனப்போ தங்கம் எவ்வளோ விலையில் இருந்தது?
News December 16, 2025
₹56,000 சம்பளம்.. 451 பணியிடங்கள்: APPLY HERE

இந்திய ராணுவ, கப்பற்படை, வான்படை அகாடமிகளில் பணிபுரிவதற்கான CDS 1 அறிவிப்பை UPSC வெளியிட்டுள்ளது. காலிப்பணியிடங்கள்: 451 கல்வித்தகுதி: டிகிரி/ B.E, B.Tech. வயது வரம்பு: 20 – 24. தேர்வு முறை: எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு. சம்பளம்: ₹56,100 – ₹1,77,500. விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.30. மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News December 16, 2025
ஸ்டாலின் உடன் வைகோ, சண்முகம் சந்திப்பு

பரபரப்பான அரசியல் களத்துக்கு மத்தியில், வைகோ, பெ.சண்முகம் ஆகியோர் CM ஸ்டாலினை பார்க்க அறிவாலயம் வந்துள்ளனர். ஜன.2-ல் மதிமுக சார்பில் நடைபெறவுள்ள மது ஒழிப்பு மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்க வைகோ வந்துள்ளாராம். அதேபோல், சென்னையில் பட்டா இல்லாதவர்களுக்கு குடிமனை பட்டா கோரிக்கை தொடர்பாக சண்முகம் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில நாள்களுக்கு முன்பு CPI நிர்வாகிகளும் அறிவாலயம் வந்திருந்தனர்.


