News October 25, 2024
ராணுவத்தை திரும்ப பெறும் பணிகள் தொடக்கம்

எல்லையில் இருந்து இந்தியாவும், சீனாவும் தங்களது ராணுவத்தை திரும்பபெறத் தொடங்கியுள்ளன. சமீபத்தில் இருநாடுகளுக்கும் இடையே தீர்மானம் எட்டப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து டெம்சோக், டெப்சாங் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கட்டுமானங்கள் அகற்றப்பட்டு, இந்திய வீரர்கள் மேற்கு பகுதிக்கும், சீன வீரர்கள் கிழக்கு பகுதிக்கும் திரும்ப அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News September 14, 2025
அண்ணாமலை காலாவதியான தலைவர்: கோவி.செழியன்

CM ஸ்டாலினை விமர்சிப்பதில் முன்னிலையில் நின்ற அண்ணாமலை, இப்போது கடும் நெருக்கடிக்கு ஆளாகி இருப்பதாக அமைச்சர் கோவி.செழியன் விமர்சித்துள்ளார். மகா யோக்கியரை போல வேஷம் போட்டு, ஒரு அதிகாரியாக இருந்து அரசியல்வாதியாக மாறி, தமிழகத்திற்கு பின்னடைவை தேடித் தந்தவரின் அனைத்து கள்ளத்தனமும் இப்போது வெட்ட வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. மொத்தத்தில் அவர் காலாவதியான அரசியல் தலைவராகி விட்டார் என சாடியுள்ளார்.
News September 14, 2025
கவினுக்கு குரல் கொடுத்த விஜய் சேதுபதி

பிரபல டான்ஸ் மாஸ்டர் சதீஷ், கவினை வைத்து ‘கிஸ்’ என்ற படத்தை எடுத்துள்ளார். கவினின் ‘டாடா’ படத்துக்கு கிடைத்த வெற்றி, ப்ளடி பெக்கருக்கு கிடைக்கவில்லை. இதனால் கிஸ் படத்தை வெற்றிப்படமாக மாற்றும் வேலையில் அவர் பிஸியாக பணியாற்றி வருகிறார். செப்டம்பர் 19-ம் தேதி திரைக்கு வரும் இப்படத்துக்கு, விஜய் சேதுபதி வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார்.
News September 14, 2025
வெறுப்புகளை விஷமாக அருந்துகிறேன்: PM மோடி

2019-ல் அசாமை சேர்ந்த பாடகர் பூபன் ஹசாரிக்காவுக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டதை காங்கிரஸ் விமர்சித்திருந்தது. இதற்கு PM மோடி பதிலடி கொடுத்துள்ளார். நான் சிவன் பக்தன் என்பதால், எனக்கு எதிராக வரும் வெறுப்பு பேச்சுகளை விஷம் போல் அருந்துவேன் எனக் குறிப்பிட்ட அவர், வேறு ஒருவரை அப்படி பேசினால் தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என எச்சரித்திருந்தார்.