News August 7, 2025
TN, SM-ல் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: தமிழிசை

தமிழகத்திலும் சரி, சமூக வலைதளங்களிலும் சரி பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என தமிழிசை வேதனை தெரிவித்துள்ளார். 2017-ல் விசிகவை சேர்ந்த நபர் ஒருவர் தமிழிசையை விமர்சித்து SM-ல் பதிவிட்டிருந்தது தொடர்பான வழக்கில் கடலூர் கோர்ட்டில் ஆஜரான பிறகு பேசிய அவர், எதிர்க்கட்சி என்று பார்க்காமல் எதிரி கட்சி என நினைத்து பெண் தலைவர்களை பலரும் சோஷியல் மீடியாவில்(SM) மோசமாக சித்தரித்து பதிவிடுவதாக குற்றம்சாட்டினார்.
Similar News
News August 7, 2025
இன்றே கடைசி… 6,238 ரயில்வே பணிகள்

ரயில்வேயில் 6,238 டெக்னீசியன் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஆக.07) கடைசி நாளாகும். கிரேடு-1 பதவியில் 183 பணியிடங்கள், கிரேட்-3 பதவிகளுக்கு 6,055 பணியிடங்கள் உள்ளன. வயது: 18 முதல் 30 வரை. சம்பளம்: பதவியை பொறுத்து ₹19,900 முதல் ₹29,200 வரை. எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் ஆள்தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க <
News August 7, 2025
பந்து சேதம்? இந்திய வீரர்கள் மீது Ex பாக்., பவுலர் புகார்

IND VS ENG இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா அபாரமாக பந்துவீசி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்திய வீரர்கள் பந்தின் பளபளப்புக்காக வாஸ்லின் தடவி இருக்கலாம் என Ex பாக்., பவுலர் ஷபீர் அகமது குற்றஞ்சாட்டியுள்ளார். 80 ஓவர்கள் முடிந்த பின்பும் பந்து பளபளப்பாக இருந்ததாக கூறிய அவர், அந்த பந்துகளை ஐசிசி பரிசோதிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
News August 7, 2025
விமர்சன வீடியோ: கோபி, சுதாகர் மீது புகார்

கவின் ஆணவக் கொலையை மையமாக வைத்து யூடியூப்பில் பரிதாபங்கள் சேனல் அண்மையில் வீடியோ வெளியிட்டனர். இந்த வீடியோவில் இரு சமூகத்தினர் இடையே பிரச்னையை உருவாக்கும் வகையில் பல கருத்துக்கள் இருப்பதாகவும், குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருப்பதாகவும் அதனை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோவை போலீஸில் தனுஷ்கோடி என்பவர் புகாரளித்துள்ளார். பரிதாபங்கள் வீடியோ பற்றி உங்கள் கருத்தென்ன?